எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆரின் சிலையை நடிகர் ரஜினி திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்வைத்து தமிழகத்தில் களம் இறங்கியுள்ளார். ஆனால் நடிகர் கமல் திராவிடத்தை முன்வைத்து அரசியல் பெயரும் கொடியும் அறிமுகப்படுத்தி அரசியல் செல்வாக்கை முன்னெடுத்து செல்கிறார். 

ஆனால் ரஜினி இன்னும் கட்சி பெயர் கொடி எதையும் வெளியிடவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட இன்னும் காலதாமதமாகும் என ரஜினி கூறியுள்ளார். 

இதனிடையே நடிகர் விஜய் அரசியல் அடிதளத்தை அமைதியாக திறம்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

சில நேரங்களில் விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி வருகிறார். 

இந்நிலையில்  நடிகர் ரஜினிகாந்த்  எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைக்க உள்ளார். சிலையை திறந்து வைத்த பிறகு மாணவர்களிடையே உரையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டுள்ளார். இது விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.