Asianet News TamilAsianet News Tamil

விஜயின் சுயநலம்... ரசிகர்கள் ஆதரவு.. எடப்பாடியார் எடுத்த ரிஸ்க்..! மல்லு கட்டும் திமுக..!

திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ள உத்தரவு விஜய் ரசிகர்களின் ஆதரவை மனதில் வைத்து தான் என்பதை தெரிந்து இந்த விவகாரத்தில் திமுக மறைமுகமாக மல்லு கட்ட ஆரம்பித்துள்ளனர்.

actor Vijay selfishness ... Fans support .. Risk taken by Edappadi palanisamy ..!
Author
Tamil Nadu, First Published Jan 6, 2021, 11:48 AM IST

திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ள உத்தரவு விஜய் ரசிகர்களின் ஆதரவை மனதில் வைத்து தான் என்பதை தெரிந்து இந்த விவகாரத்தில் திமுக மறைமுகமாக மல்லு கட்ட ஆரம்பித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவோடு இரவாக நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிவிட்டு திரும்பினார். பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோர விஜய் தன்னை சந்தித்ததாக மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்த நிலையில் திடீரென அண்மையில் திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. விஜய் – எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பை தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியானது.

actor Vijay selfishness ... Fans support .. Risk taken by Edappadi palanisamy ..!

ஆனால் திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திரைத்துறையை சேர்ந்த நடிகர் அரவிந்த் சாமி, நடிகை கஸ்தூரி போன்றோர் கூட திரையரங்குகளில் முழு அளவில் ரசிகர்களை அனுமதிப்பது ஆபத்தான என்று கூறியுள்ளனர். சுமார் இரண்டரை மணி நேரம் பூட்டிய அரங்கிற்குள் ஏசி வசதியுடன் ஆயிரக்கணக்கானவர்களை அமர வைத்தால் கொரோனா எளிதில் பரவும் என்று எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிப்பதற்கு மருத்துவர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

actor Vijay selfishness ... Fans support .. Risk taken by Edappadi palanisamy ..!

ஆனால் இந்த விஷயத்தில் நடிகர் விஜய் தனது சுயநலம் ஒன்றே குறிக்கோளாக செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மாஸ்டர் திரைப்படத்தை எடுத்து முடித்து சுமார் ஒரு வருடத்திற்கு மேலாகிறது. கொரோனா காரணமாக படத்தை வெளியிட முடியவில்லை. ஆனால் படத்தை ஏற்கனவே விநியோகஸ்தர்கள் நல்ல தொகைக்கு வாங்கிவிட்டனர். ஆனால் படத்தை வெளியிட முடியாத சூழலில் விநியோகஸ்தர்கள் பலரும் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தி வருகின்றனர். இதே போல் மாஸ்டர் தயாரிப்பாளரும கூட சுமார் 200 கோடி ரூபாய் வரை இந்த படத்தில் முதலீடு செய்துவிட்டு ஓராண்டாக தவித்து வருகிறார்.

திரையரங்குகளில் 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதி என்கிற நிலையில் மாஸ்டர் படத்தை வெளியிட்டால் ஏற்கனவே பேசிய தொகைக்கு ஒத்துக் கொள்ளப்போவதில்லை என்று சில விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளரை நெருக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதி என்றால் தங்களுக்கு மாஸ்டர் படமே வேண்டாம் என்று சில விநியோகஸ்தர்கள் கொடுத்த அட்வான்சை திரும்ப கேட்க ஆரம்பித்துள்ளனர். மேலும் படத்தை சொந்தமாக வெளியிட தயாரிப்பாளர் முடிவெடுத்த நிலையில் 50 சதவீத ரசிகர்களுடன் திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்வது ரிஸ்க் என்று அவருக்கு சிலர் அறிவுரை கூறியுள்ளனர்.

actor Vijay selfishness ... Fans support .. Risk taken by Edappadi palanisamy ..!

இதனால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யலாம் என்றால், அதற்கு விஜய் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் தான் ஒன்று 100 சதவீத ரசிகர்களுடன் படத்தை வெளியிட ஏற்பாடு செய்யுங்கள் இல்லை என்றால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய அனுமதியுங்கள் என்று விஜயை தயாரிப்பாளர் வலியுறுத்தியுள்ளார். இதன் பிறகே தனது படம் திரையரங்குகளில் வெளியானால் போதும் தனது ரசிகர்களுக்கு கொரோனா வந்து செத்தாலும் பரவாயில்லை என்று விஜய்முதலமைச்சரை சந்தித்து திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

actor Vijay selfishness ... Fans support .. Risk taken by Edappadi palanisamy ..!

அப்போது இதற்கு பிரதிபலனாக சட்டமன்ற தேர்தல் சமயத்தில் நடிகர் விஜயின் ஆதரவை எடப்பாடி பழனிசாமி கோரியதாக சொல்கிறார்கள். தான் வெளிப்படையாக ஆதரவு தரவில்லை என்றாலும் தனது மக்கள் இயக்கம் மூலமாக அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபடுவதாக விஜய் வாக்குறுதி அளித்ததாக சொல்கிறார்கள். இதன் பிறகே எடப்பாடியார் ரிஸ்க் எடுத்து திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் விஜய் – எடப்பாடி பழனிசாமி இடையிலான டீலிங்கை உணர்ந்து கொண்ட திமுக தற்போது திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மறைமுகமாக மல்லுகட்ட ஆரம்பித்துள்ளது.

actor Vijay selfishness ... Fans support .. Risk taken by Edappadi palanisamy ..!

சமூகவலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் தற்போது விஜய் முதலமைச்சரை சந்தித்ததையும் அதன் பிறகு திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிப்பதற்கு எதிராகவும் கருத்துகளை பதிவிட ஆரம்பித்துள்ளனர். மேலும் அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரத்தை அடிப்படையாக வைத்து எடப்பாடிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி 100 சதவீத ரசிகர்கள் அனுமதி உத்தரவை திரும்ப பெற வைக்க திமுக மறைமுகமாக மல்லுகட்ட ஆரம்பித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios