Asianet News TamilAsianet News Tamil

நடிகர் விஜய்,அன்பு செழியன்,கல்பாத்தி ஆகியோர் கழுத்துக்கு கத்திவைக்க அமலாக்கத்துறை தயார் .!!

நடிகர் விஜய்.சினிமா பைனான்சியர் அன்புசெழியன்,ஏ.ஜி.எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கல்பாத்தி,அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ஆபீஸ், வீடுகளில் வருமானவரி துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டு தமிழகத்தில் அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தநிலையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் பணியும் தீவிரமடைந்திருக்கிறது

Actor Vijay, Anbu Chezhiyan and Kalpathy are ready to shout for their necks!
Author
Tamilnádu, First Published Feb 26, 2020, 9:21 AM IST

T.Balamurukan

நடிகர் விஜய்.சினிமா பைனான்சியர் அன்புசெழியன்,ஏ.ஜி.எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கல்பாத்தி,அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ஆபீஸ், வீடுகளில் வருமானவரி துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டு தமிழகத்தில் அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தநிலையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் பணியும் தீவிரமடைந்திருக்கிறது.

Actor Vijay, Anbu Chezhiyan and Kalpathy are ready to shout for their necks!

ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகா் விஜய் நடித்த பிகில் திரைப்படம்  கடந்த தீபாவளிக்கு வெளியானது.இத் திரைப்படம் மூலம் ரூ.300 கோடி லாபம் ஈட்டியதாகவும், இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம், நடிகா் விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரித் துறையினா் கடந்த மாதம் திடீா் சோதனை செய்தது. அத்துடன், நடிகா் விஜய்யை, அவரது பனையூரில் பங்களாவுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியது.

Actor Vijay, Anbu Chezhiyan and Kalpathy are ready to shout for their necks!

அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.150 கோடி கணக்கில் வராத பணத்தை வருமானவரித்துறை கைப்பற்றியதாக  சொல்லப்படுகிறது. பிகில் படம் ரூ.300 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமானவரித் துறை அறிவித்தது. அதைத் தொடா்ந்து வருமானவரித் துறையினா் நடிகா் விஜய், ஏ.ஜி.எஸ். நிறுவன நிர்வாகிகள், அன்புச்செழியன் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது. இதையடுத்து நடிகா் விஜய், அன்புச்செழியன் ஆகியோரின் ஆடிட்டா்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை புலனாய்வுப் பிரிவில் கடந்த 11-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளித்தார்கள்.

Actor Vijay, Anbu Chezhiyan and Kalpathy are ready to shout for their necks!

ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அா்ச்சனா கல்பாத்தி அகோரம்,  அன்புச்செழியன்,அகியோர் தங்களது ஆடிட்டருடன் விசாரணைக்கு ஆஜரானார்கள்.அமலாக்கத்துறை விசாரணை, இந்நிலையில் வருமானவரித் துறை நடத்திய சோதனையிலும், விசாரணையிலும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அது தொடா்பான விசாரணை செய்ய வருமானவரித் துறை, அமலாக்கத் துறைக்கு அறிக்கை அளித்தது. மேலும், சோதனையின் கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் முதல்கட்ட விசாரணையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது உறுதி என்கிறது அமலாக்கத்துறை.

Follow Us:
Download App:
  • android
  • ios