மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று சொல்லிவிட்டு, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து பாமகவில் இருந்து விலகி  நடிகர் ரஞ்சித் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.

அமமுகவில் கடந்த தேர்தலுக்கு தானாகவே பல மாவட்டங்களுக்கு பிரச்சாரத்துக்கு சென்றார். ஆனால் எந்த மாவட்டத்திலும் அமமுகவின் மாவட்டச் செயலாளர்கள் ரஞ்சித்தை வரவேற்கவோ, இந்த இடத்தில் பேசுங்கள் என்று திட்டமிட்டுக் கொடுக்கவோ இல்லை.


 
சொல்லப் போனால் யாரும் ரஞ்சித்தை கண்டுகொள்ளவும் இல்லை. இன்னும் பல மாசெக்கள் ரஞ்சித்தின் போனைக் கூட அட்டெண்ட் செய்யவில்லை. அதையும் தாண்டி தானாக தன் சொந்த செலவில் தினகரனுக்காக பிரச்சாரம் சென்றார் ரஞ்சித்.

இதையடுத்து அமமுகவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால்  நடிகர் ரஞ்சித் அமமுகவில் இருந்து  ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் அவர் அமமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தெரிகிறது.

அமமுகவில் கடும் அதிருப்தியுடன் இருக்கும் நடிகர் ரஞ்சித்தை தாவி அணைத்துக் கொள்ள பாஜக தற்போது தயாராகி வருகிறது. ஏற்கனவே நடிகர் ரஞ்சித்தின் விவவாக ரத்து செய்த மனைவி ப்ரியா ராமன் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் இவரும் பாஜகவில் ஐக்கியமாக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் திமுகவுக்கு செல்வதா, பாஜகவுக்கு செல்வதா என்று  ரஞ்சித் யோசித்துக் கொண்டிருப்பதாக அவத்து நண்பர்க்ள் தெரிவித்துள்ளனர். ரஞ்சித் திமகவில் இணைகிறாரோ அல்லது பாவில் இணைகிறாரோ ஆனால் உறுதியாக அமமுகவில் இருந்து விலகுகிறார் என்பதே உண்மை.