நச்சுன்னு 4 கேள்வி கேட்ட நடிகர் ரஞ்சித்...! 

நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக தெரிவித்து உள்ளார். அதற்கு காரணமாக, அதிமுக உடன் பாமக கூட்டணி வைத்ததை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டு உள்ளார்.

ஆனால், பாமக ,அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாகி இன்றுடன் 6 நாட்கள் ஆகி உள்ளது. இந்த நிலையில் இன்று தான் பாமகவில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்து உள்ளது அனைவரையும் சற்று சிந்திக்க வைத்து உள்ளது. அதாவது அடுத்து எந்த கட்சியில் அவர் இணைய உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் இந்த ஆறு நாட்களில் வேறு கட்சியுடன் இணைவது குறித்த முடிவை எடுத்துவிட்டு இப்போது பாமகவில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார் ரஞ்சித்.  

இது குறித்து ரஞ்சித் பேசியது..! 

அரசியல் நாடகம் நடத்தும் போலிகளை கண்டறிய வேண்டும்...மாற்றம், முன்னேற்றம் என்பதெல்லாம் ஏமாற்றம் ஆகிவிட்டது...கூட்டணி குறித்து எந்த தொண்டர்களுடன் ஆலோசிக்கப்பட்டது ? தொண்டர்களை சந்தித்து கருத்து கேட்ட பின்னரே கூட்டணி என்று கூறியதை கேட்டதும் சிரிப்புதான் வந்தது.

நான்கு பேருக்கு கூஜா தூக்கி கொண்டு என்னால் இருக்க முடியாது.யாரை எதிர்த்து போராடினோமோ அவர்களுடன் ஒன்று சேர்ந்து விருந்து சாப்பிடுவது வேதனையளிக்கிறது. இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் ஏமாற்றிவிட்டனர். 

உள்ளாட்சித் தேர்தல் வரை அதிமுகவுடன் இணைந்திருப்பர். பின்னர் விலகிவிடுவர். இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் மக்களை பாமக ஏமாற்றும்? என இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து, பாமகவில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார் நடிகர் ரஞ்சித்.