Asianet News TamilAsianet News Tamil

அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்... தம்பி ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்கும் மு.க.அழகிரி..!

நடிகர் ரஜினி 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக கட்சித் தொடங்கி அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஜினி பேசிவருகிறார். சில தினங்களுக்கு முன்புகூட செய்தியாளர்களிடம் பேசும்போதும், தமிழகத்தில் இன்னும் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என ரஜினி தெரிவித்தார். 

actor rajini statement true... stalin shock alagiri speech
Author
Tamil Nadu, First Published Nov 14, 2019, 2:11 PM IST

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அதிரடியாக தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினி 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக கட்சித் தொடங்கி அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஜினி பேசிவருகிறார். சில தினங்களுக்கு முன்புகூட செய்தியாளர்களிடம் பேசும்போதும், தமிழகத்தில் இன்னும் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என ரஜினி தெரிவித்தார். 

actor rajini statement true... stalin shock alagiri speech

ரஜினியின் கருத்துக்கு உடனடியாக கருத்து தெரிவித்த திமுக பொருளாளர் துரைமுருகன், வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி ரொம்ப நாளாகிவிட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு ரஜினி அதை உணர்ந்துகொள்வார் எனத் தெரிவித்திருந்தார். இதேபோல விக்கிரவாண்டியின் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ரஜினிக்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுகவில் வெற்றிடம் ஏதும் இல்லை. யார் கட்சித் தொடங்கினாலும் 2021-லும் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

actor rajini statement true... stalin shock alagiri speech

இந்நிலையில், அரசியல் குறித்து பேட்டியளிக்க ஆர்வம் காட்டாத மு.க.அழகிரி இன்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாக பேசியுள்ளார். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை என்றும், அரசியல் வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினி கட்சி தொடங்கினால் இணைவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போது எதுவும் கூற முடியாது என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios