கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடைபெற்ற முக்குலத்தோர் புலிப்படை பொதுவ் கூட்டத்தில்  நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நான் அடிப்பேன் என்று பயந்து போயிள்ளார், என்றும், தி.நகர் போலீஸ் உயர் அதிகாரியை எச்சரித்தும், தொண்டர்கள் கொலை செய்வதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டு செய்யுங்கள், உங்கள் குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மிரட்டும் தொனியில் பேசி இருந்தார்.

இது வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட இணையதள ஊடகங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


ஆனால் அவர் மீண்டும் செய்தியாளர்கடம் பேசும்போதுஇ நான் எல்லா மக்களையும் நேசிக்க கூடியவன். எல்லா சமுதாயத்தையும் நேசிக்க கூடியவன். ஒருவேளை நான் அங்கு பேசும்போது ஏதாவது உணர்ச்சிவசப்பட்டு பேசி இருந்தால், தவறுதலாக சில வார்த்தைகள் சொல்லி இருந்தால் அதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், கருணாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கருணாஸ் ஜாதிரீதியாக பேசியது மிகப் பெரிய தவறு என்றும் சுட்டிக்காட்டினார்.
 


இதனால் ஆத்திரமடைந்த கருணாஸ்,  அமைச்சர் ஜெயக்குமார் என்ன உலகத்திலேயே பெரிய அரிச்சந்திரனா? தப்பு யார் செய்தாலும் தப்புதான்.  என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என சவால் விட்டார். மேலும் எனக்குப் பின்னால் எனது சமுதாய மக்கள் இருக்கிறார்கள் எனவும் கருணாஸ் கூறினார்