சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் இணை ஆணையர் (சுகாதாரம்) கூடுதல் பொது சுகாதார அலுவலர்கள், தலைமை மருத்துவ அலுவலர்கள், மண்டல நல அலுவலர்கள் மற்றும் மண்டல மருத்துவ அலுவலர்கள், தலைமை பூச்சியியல் தடுப்பு அதிகாரி, அனைத்து மண்டல பூச்சியியல் வல்லுனர்களுடன் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, அம்மா மாளிகை அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாவது:- அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தங்களது பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகின்றனர், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு தீவிரமாக கண்காணிப்பது குறித்து கூடுதல் பொது சுகாதார அலுவலர்கள்,  தலைமை மருத்துவ அலுவலர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள் ஆகியோருக்கு கீழ்கண்ட அறிவுரைகளை வழங்கினார்.

களப்பணி ஆற்ற சுகாதாரப் பணியாளர்கள், NGO ஊழியர்கள், சுகாதார ஆய்வாளர்களால், street maping மூலம் அதிகமான நோய் தொற்று உள்ள தெருக்களின் பெயர்கள் குறிக்கப்பட்டு, அவ்விடங்களில் களப்பணியாளர்களை தீவிரமாக நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் வேண்டும். மண்டல அலுவலர்கள், கூடுதல் நகர சுகாதார அலுவலர்கள், தலைமை மருத்துவ அலுவலர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், மண்டல மருத்துவ அலுவலர்கள், கண்காணித்து ஆய்வு அறிக்கை வட்டார துணை ஆணையர்கள் மூலமாக இணை ஆணையர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெற்ற பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கண்டறிவதற்காக, RT-PCR டெஸ்ட் அனைத்து அரசு தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்படும் மாதிரிகள், உடனுக்குடன் உரிய மாதிரி படிவத்தில் கணினியில் உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு அனுப்பப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

களப்பணியாளர்கள் களப்பணியை குழுவாக ஒருங்கிணைந்து, வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல் உள்ளவர்களை கண்டறிந்து விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள பதிவேட்டில் பதியவும், உடனடியாக சுகாதார அலுவலர்களுக்கு தெரியப்படுத்தவும், மொபைல் ஆப்பிள் பதிவேற்றம் செய்யவும், மூச்சுத்திணறல் உள்ளவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் எத்தனை பேர், வீட்டில் கண்காணிப்பில் உள்ள நபர்கள் விவரம் போன்றவற்றை சுகாதார ஆய்வாளர்கள் அந்தந்த மண்டல அலுவலர்களுக்கு தெரியப்படுத்த  வேண்டும். infrared thermometer மூலம் காய்ச்சல் உள்ளதா இல்லையா என்பது குறித்து தினந்தோறும் கணக்கெடுக்கபடுவதன் விவரங்கள் பதிவேடுகளில் பதியப்பட வேண்டும்.  காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு உரிய தீவிர சிகிச்சை அளித்து இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 

நோய் தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கும் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று  உண்மையான விவரங்களை பதிவேற்றம் செய்கிறார்களா அல்லது பொய்யான தகவல்களை பதிவேட்டில் எழுதுகிறார்களா என்பதை மண்டல சுகாதார ஆய்வாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும், அனைத்து நிலை தற்காலிக பணியாளர்களின் வருகை பதிவேடுகளும் நேரடியாக ஆய்வு செய்யப்படவும். களப்பணியாளர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராமலும், களப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்களா என்பது குறித்தும், அடிக்கடி விடுப்பில் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சரியான முறையில் கொடுக்கப்படாத களப்பணியாளர்களை கண்டறிந்து சம்பளம் பிடித்தம், மற்றும் உடனடியாக பணியில் இருந்து விடுவிப்பது என மண்டல அலுவலர்கள், மண்டல நல அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்கள் செலவிலேயே ஆன்டிபாடி டெஸ்ட் எடுக்கப்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவுறுத்த படவேண்டும். 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட வேண்டும். களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று வைரஸ் நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் போது வீடுகளில் இருக்கும் மக்களிடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், வீட்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் படியும், இனி வரும் மாதங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், கொசு உற்பத்தி பெருக்கம் அதிகமாக இருக்கும் என்றும், அதனால் மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்க வீட்டின் மொட்டைமாடியில், கழிவு பொருட்களை சேகரித்து வைக்காமல், பூந்தொட்டி, தேங்காய் ஓடு, பழைய ரப்பர், டயர் போன்ற கழிவுப் பொருட்களை உடனுக்குடன் வெளியே அகற்றவும், வீடுகளில் உள்ள குளிர்சாதன பெட்டி,  தண்ணீர் தொட்டி, முதலியவற்றை அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்கவும், மண்டலப்பூச்சியியல் வல்லுனர்கள், களப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தவும், கள ஆய்வு செய்து  மண்டல நல அலுவலர்க்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், காலி நிலங்கள் போன்ற முக்கியமான இடங்களை கண்டறிந்து கொசு உற்பத்தி பெருக்கத்தை தடுக்கும் வகையில் அவ்வப்போது கிருமிநாசினி தெளித்தும் புகைப்போக்கி உபயோகித்தும் சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

காலி நில உரிமையாளர்களை கண்டறிந்து தகுந்த அறிவுரை வழங்கவும், முதலில் நோட்டீஸ் கொடுக்கவும், அதன்பின் அபராத கட்டணம் வசூலித்தால், ஆட்டோ ஒலிபெருக்கி மூலமாக அவர்களுக்கு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காலி நிலங்கள் சுத்தம் செய்யப்படாமல் இருந்தால் அந்த இடம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என பலகை  வைக்கப்படும். மண்டல பூச்சியியல் வல்லுனர்கள், களப்பணியாளர்கள் ஒன்றிணைந்து கள ஆய்வு மேற்கொள்ளவும், மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார். கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தவும், அவ்வப்போது கிருமி நாசினி தெளித்து, புகைபோக்கிகளை உபயோகித்து, டெங்கு மலேரியா போன்ற கொடிய நோய் வராமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.