டிடிவி. தினகரனை இனி நம்புவதற்கு எந்த ஒரு சூழலும் இல்லை என்று சசிகலா அதிரடியான முடிவெடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக மாற்றி டிடிவி தினகரன் அந்தக் கட்சிக்கு தன்னையே பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார். சசிகலாவின் ஒப்புதலைப் பெற்று தான் தினகரன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீது சசிகலாவிற்கு பெரிய அளவில் எந்த ஈர்ப்பும் இல்லை. அதனால் தான் தினகரன் பொதுச்செயலாளராக ஆன போதிலும் அவர் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.

 

சசிகலாவின் என்னவெல்லாம் மீண்டும் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதுதான். அதிமுகவின் பொதுச் செயலாளராக மீண்டும் நான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான் சசிகலாவின் முழு நேர எண்ணமாக உள்ளது. ஆனால் தினகரனும் அதிமுகவை பற்றி தற்போது சற்றும் கவலைப்படவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதனை அறிந்து தான் சசிகலா தற்போது டென்ஷனாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவிற்கு உரிமை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து ஆலோசிக்க வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அண்மையில் தினகரனை அணுகியுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டாத தினகரன் அதுகுறித்து சின்னம்மாவிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று ராஜா செந்தூர் பாண்டியனை அனுப்பி வைத்ததாக சொல்கிறார்கள். இந்த தகவலை அறிந்த தான் அதிமுகவை கைப்பற்றும் விவகாரத்தில் இனி தினகரனை நம்பி பலனில்லை என்று வேறு ஒரு திட்டத்தை சசிகலா கையில் எடுக்க உள்ளதாக கூறுகிறார்கள். 

அந்த வகையில் தனது சகோதரர் திவாகரன் மீண்டும் தன்னுடன் சேர்த்துக் கொள்ள சசிகலா முடிவெடுத்து விட்டதாகவும் விரைவில் சிறையில் சசிகலாவை திவாகரன் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.