தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
கடந்த 22ம் தேதி முதல் பள்ளி ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 17 பி பிரிவின் கீழ் ஆசிரியர்கள் பணிக்கு வராதது குறித்து விளக்கம் அளிக்க அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் தற்காலிக ஆசிரியர்களை நியமக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளனர். தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு ரூ.7500 ஊதியத்தை பெற்றோர் ஆசிரியர்கழகம் சார்பில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், 4.5 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். ஜாக்டோ-ஜியோவின் முதல்நாள் போராட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் 300 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டத்திலும் தாலுகா அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரையில் தொடக்கப்பள்ளிகள் அதிகளவு செயல்படவில்லை. பல மாவட்டங்களில் 1-ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் அதிகளவு பங்கேற்றதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஜனவரி 25-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழக பள்ளிக் கல்வித்துறையும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அந்த உத்தரவுகளை பொருட்படுத்தவில்லை. இதனால் போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 24, 2019, 3:56 PM IST