கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக திமுக தலைமை கூறியுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட ஆகிய மாவட்டங்கள் கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1. தஞ்சை வடக்கு மாவட்டம்

*  திருவிடைமருதூர் (தனி)
*  கும்பகோணம்
*  பாபநாசம்

2.தஞ்சை மத்திய மாவட்டம்

*  திருவையாறு
*  ஒரத்தநாடு
*  தஞ்சாவூர்

3.தஞ்சை தெற்கு மாவட்டம்

*  பட்டுக்கோட்டை
*  பேராவூரணி

தஞ்சை வடக்கு மாவட்டம்

 பொறுப்பாளர்  - சு.கல்யாணசுந்தரம்,

தஞ்சை மத்திய மாவட்டம்

 பொறுப்பாளர் - துரை. சந்திரசேகரன்
 
தஞ்சை தெற்கு மாவட்டம்

 பொறுப்பாளர்  -  ஏனாதி ப.பாலசுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.