இங்கு ரஜினி அரசியலை குறிப்பிட்டாக வேண்டும். 1990களில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அவர் போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட தயாராகிவிட்டால் சுமார் ஒரு மணி நேரம் அங்கு போக்குவரத்து நிறுத்தப்படும். அப்படி ஒரு நாள் போக்குவரத்து நிறுத்தப்பட, ரஜினி காரில் சிக்கிக் கொண்டார். தனது வீடு அருகாமையில் தான் உள்ளது அனுமதித்தால் சென்றுவிடுவேன் என்று அங்கிருந்த போலீசாரிடம் ரஜினி கூறியுள்ளார். ஆனால் முதலமைச்சர் செல்லும் வரை யாருடையை காரையும் அனுமதிக்க முடியாது என்று அங்கிருந்த போலீஸ்கார் கூறிவிட்டார். அப்போது ரஜினி செய்தது தான் மிகப்பெரிய அரசியல். ஆம் காரில் இருந்து கீழே இறங்கிய ரஜினி தனது வழக்கமான ஸ்டைலுடன் வீட்டிற்கு நடக்க ஆரம்பித்துவிட்டார். ரஜினி நடப்பதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். பெரும் கூட்டம் கூடிவிட்டது. போலீசார் எவ்வளவோ முயன்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஜெயலலிதா திட்டமிட்டபடி அந்த நிகழ்சசிக்கு செல்ல முடியவில்லை.

தன்னை இம்சிக்க நினைத்த ஜெயலலிதாவிற்கு அந்த நொடியே ரஜினி பதிலடி கொடுத்தார். அப்போது முதல் ரஜினியின் கார் போயஸ்கார்டனில் எப்போதும் நிறுத்தப்பட்டதே இல்லை. ஆனால் விஜயோ தன்னை காரில் இருந்து இறங்கவிடாமல் ஒரு இன்ஸ்பெக்டர் திருப்பி அனுப்ப சத்தமே இல்லாமல் சென்னை திரும்பிச் சென்றார். இவ்வளவு தான் விஜயின் துணிச்சல், அவருக்கு தெரிந்த அரசியல். திமுகவுடன் ஏற்பட்ட உரசலை தொடர்ந்து ஜெயலலிதா பக்கம் விஜய் திரும்பினார். 2011 தேர்தலில் திமுகவிற்கு எதிராக அதிமுகவிற்கு ஆதரவாக விஜய் வெளிப்படையாக பிரச்சாரம் செய்ய தனது ரசிகர்களை அனுமதித்தார். கொளத்தூரில் ஸ்டாலினுக்கு எதிராக ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே களம் இறக்கினார். ஆனால் கொளத்தூரில் ஸ்டாலினை தோற்கடிக்க முடியவில்லை. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. உடடினயாக ஜெயலலிதாவைசந்தித்து எஸ்ஏசி – விஜய் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த எஸ்ஏசி, அதிமுக வெற்றி பெற ஒரு அணிலாக விஜய் உதவியுள்ளார் என்று பேட்டி அளித்தார். அப்போது ஆரம்பித்தார் ஜெயலலிதா, விஜயை விரட்டி விரட்டி அடித்தார். விஜயின் படம் ஒன்று கூட பிரச்சனை இல்லாமல் வெளியாகவில்லை. அனைத்து படங்களுக்கும் ஏதோ ஒரு பிரச்சனை உருவாக்கப்பட்டது. விஜயின் படங்களை ஜெயா டிவி அடிமாட்டு விலைக்கு வாங்கியது. ஆனால் ஜெயலலிதாவிற்கு எதிராக விஜய் மூச்சுவிடவில்லை. ஆனால் விஜயின் அரசியல் ஆசை அடங்கவில்லை. தலைவா எ டைம் டூ லிட் என்கிற கேப்சனுடன் ஒரு படத்தை முடித்தார். தகவல் போயஸ் கார்டனுக்கு கிடைத்தது. அந்த படம் வெளியாகக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதே போல் தலைவா படத்தை வெளியிட எந்த திரையரங்கமும் தயாராக இல்லை. தயாரிப்பாளர் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார். அப்போது விஜய் அண்ணா அவர்கள், மாண்புமிகு அம்மா அவர்கள் என்று கெஞ்சி ஒரு வீடியோவை வெளியிட்டார்.

போதாக்குறைக்கு ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாட்டிற்கு தனது தந்தையுடன் விஜய் புறப்பட்டார். ஆனால் கொடநாட்டில் ஜெயலலிதாவின் பங்களா வாசல் கூட திறக்கப்படவில்லை. அங்கிருந்தும் அவமானத்துடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். கோவையில் திமுக ஆட்சி காலத்தில் ஏற்பட்ட அவமானத்தை விட இந்த அவமானம் மிகப்பெரியது. படமும் வெளியாகவில்லை. ஜெயலலிதாவையும் சந்திக்க முடியவில்லை. ஆனாலும் மாண்புமிகு அம்மா என்று கெஞ்சி ஒரு வீடியோ. இவ்வளவு தான் விஜயின் அரசியல். துணிச்சல். பிறகு ஆளும் தரப்பு சில காட்சிகளை வெட்டித் தூக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தயாரிப்பாளருடன் சமசரம் பேசியதால் அந்த படம் வெளியானது. படமும் படு தோல்வி. இப்படி ஜெயலலிதாவால் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டதாலும், திமுகவும் விஜயை தூரத்திலேயே வைத்திருந்ததாலும் ஆதரவுக்கு விஜய்க்கு தேவைப்பட்டவர் தான் மோடி. 2014 தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி கோவை வந்த போது அவரை தேடிச் சென்று சந்தித்தார் விஜய். பாஜகவிற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் களம் இறங்கினர்.