ஒருவழியாக வேட்புமனு ஏற்பு.. காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கோயிலில் சிறப்பு பூஜை
பரபரப்பான சூழலில் நேற்று வேட்பு மனு மீதான பரிசீலனையின் போது டி.கே. சிவக்குமாரின் மனு ஏற்கப்பட்டது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியானது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதையும் படிங்க : கொத்தடிமையாக்கும் 12 மணி நேர பணி சட்டம்.. தவறானது.. ஏத்துக்கவே முடியாது.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!
இந்த தேர்தலில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் டி.கே சிவக்குமாரை தோற்கடிக்க பாஜக பல வியூகங்களை வகுத்து வருகிறது. இதனிடையே கடந்த 17-ம் தேதி டி.கே.சிவக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் வேட்புமனுவில் சொத்து விவரங்களிலும், வருமான வரித்துறைக்கு அளித்த சொத்து விவரங்களிலும் வித்தியாசம் இருப்பதாகவும், அதனால் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.. ஒருவேளை அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டால், அவருக்கு பதில் அவரின் தம்பி டி.கே சுரேஷ் களமிறக்கப்பட்டார்.. அதன்படி டி.கே. சுரேஷ் கடந்த 20-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்..
இதனிடையே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தம்மை விசாரிக்க சிபிஐக்கு கர்நாடக அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து டிகே சிவகுமார் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி நேற்று தள்ளுபடி செய்தது..
இந்த பரபரப்பான சூழலில் நேற்று வேட்பு மனு மீதான பரிசீலனையின் போது டி.கே. சிவக்குமாரின் மனு ஏற்கப்பட்டது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியானது.. இந்நிலையில் கேபிசிசி தலைவர் டி.கே.சிவகுமார் நடத்தும் கோவில். கனகபுரா தொகுதியில் உள்ள மலகாலு ஈஸ்வரா கோவிலில் டி.கே சிவக்குமார் அதிகாலையில் பூஜை செய்தார். அங்கு புனித நீராடிய அவர் சிறப்பு பூஜையும் செய்தார். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தால் அவர் முதலமைச்சராக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே பல கிராமங்களில் கூட டி.கே.சிவக்குமார் பெயரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.