நாய்க்கு ஏசி போட திருட்டுதனமாக கரண்ட் திருடிய நபருக்கு அங்குள்ள மின்சாரவாரியம் அபராதம் விதித்துள்ளது. இந்த திருட்டு மின்சாரம் அக்கம் பக்கத்தினரை அதிர்ச்சியடைய ச் செய்திருக்கிறது.

T,balamurukan

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாய்க்கு ஏசி போட திருட்டுதனமாக கரண்ட் திருடிய நபருக்கு அங்குள்ள மின்சாரவாரியம் அபராதம் விதித்துள்ளது. இந்த திருட்டு மின்சாரம் அக்கம் பக்கத்தினரை அதிர்ச்சியடைய ச் செய்திருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்திம், தானே மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் விலையுயர்ந்த நாய்களை வளர்த்து வருகிறார். தற்போது வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் மனிதர்கள் வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க முடியாமல் சிரம்மப்பட்டு வருகிறார்கள்.

 நாய்குட்டிகள் வெயில் வெப்பத்தில் பாதிக்கப்படாமல் இருக்க தனது வீட்டின் மின் அளவீட்டுக் கருவியின் கண்ணை மறைத்து, தனியாக ஒரு ஒயரின் மூலம் திருட்டுத்தனமாக மின்சாரத்தை கடத்தி நாய்கள் இருக்கும் அறைக்குள் செலுத்தினார். அங்கு 24 மணி நேரமும் குளிர்சாதன இயந்திரங்கள் இயங்குமாறு வசதிப்படுத்திக் கொடுத்திருந்தார். இதை எப்படியோ எட்டி பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் உடனே மின்சார வாரியத்திற்கு போட்டுக்கொடுத்திருக்கிறார். அதிகாரிகளும் வந்து வீட்டில் சோதனை செய்து பார்த்த போது நாய்கள் சொகுசாக வாழ்வதற்கு 34 ஆயிரத்து 465யூனிட் மின்சாரத்தை திருடியது அம்பலமானது.மின்சார திருட்டுக்காக அந்த நபரிடம் இருந்து மின்சார வாரியம் அபராதமாக ரூ7லட்சம் பெறப்பட்டது.