Asianet News TamilAsianet News Tamil

’பாவங்களால் ஏற்பட்ட நோய்க்கு பலியாகி விடாதீர்கள்...’ ஓடி ஒளிந்து ஆடியோ வெளியிட்ட தப்லிகி ஜமாத் தலைவர்..!

அரசாங்கத்தின் உரிமைகளை பின்பற்றுங்கள். எங்கும் கூடியிருக்க வேண்டாம். தொற்றுநோய், மனிதனின் பாவங்களால் ஏற்பட்டுள்ளது

ablighi Jamaat leader who ran and released the audio
Author
Delhi, First Published Apr 2, 2020, 2:07 PM IST

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து, அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாத் கேட்டுக் கொண்டுள்ளார்.ablighi Jamaat leader who ran and released the audio

டெல்லியில் நிஜாமுதீன் மசூதியில் தப்லிகி ஜமாத் சார்பில் நடந்த மதவழிபாட்டில் பங்கேற்றவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொண்ட சுமார் 9000 பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.  இதனால், மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த அமைப்பின் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.ablighi Jamaat leader who ran and released the audio

 இதற்கிடையே மார்ச் 28ம் தேதி முதல் தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாத் தலைமறைவானார். போலீசார் அவரை டெல்லி உட்பட பல மாநிலங்களில் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், மவுலானா பேசி வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்றில், ‘’டாக்டர்கள் அறிவுறுத்தியபடி நான் டெல்லியில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறேன். ablighi Jamaat leader who ran and released the audio

ஜமாத்தை சேர்ந்த அனைவரும் நாட்டில் எங்கிருந்தாலும் சட்டத்தின் உத்தரவுகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். வீட்டுக்குள்ளேயே இருங்கள். அரசாங்கத்தின் உரிமைகளை பின்பற்றுங்கள். எங்கும் கூடியிருக்க வேண்டாம். தொற்றுநோய், மனிதனின் பாவங்களால் ஏற்பட்டுள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios