பிரியாணி கடையில் வேலை  பார்ப்பவருடன் ஏற்ப்பட்ட  தொடர்பால்  உல்லாச வாழ்க்கை  அனுபவித்து வந்த  அபிராமி என்ற பெண், தனது இரண்டு குழைந்தைகளையும்  விஷம் வைத்துக் கொன்றுள்ளார்.  மேலும் கணவருக்கு விஷம் வைத்ததில் தப்பித்தது எப்படி? விஷம் வாங்க உதவியது யார்?

தனது மனைவிக்கு வேறொருவருடன் கள்ளக் காதல் விவகாரம் அறிந்த கணவர் விஜய்  கள்ளத்தொடர்பை கைவிடக்கோரி  பலமுறை கூறியும் அபிராமி அதனை ஏற்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவரின் டார்ச்சரால் தனது கள்ளக் காதலனுடனான உல்லாச வாழ்க்கை பாதித்ததால் குழப்பத்தில் இருந்த அபிராமி தனது கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக் காதலன் சுந்தரத்துடன்  தனது புதிய வாழ்க்கையை தொடங்க ப்ளான் போட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று விஜய் மாதம் கடைசி என்பதால் அலுவலகத்திலேயே தங்கிவிட்டார், இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அபிராமி, டீ யில் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார். தாயின் உல்லாசத்துக்கு தாம் தடையாக இருப்பதால் கொள்கிறார் என தெரியாமல் அதை வாங்கிக் குடித்த பிஞ்சுகள் சில நிமிடங்களில் வாயில் நுரை தள்ளி துடிதுடித்து உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து,  தனது கணவரையும் கொள்ள விஷம் வைத்து கொள்ளவும் ப்ளான் போட்டுள்ளார். அனால் முதலில் தனது குழந்தைகள்  செத்துக் கிடப்பதைப் பார்த்த கணவர் மனைவி வைத்துவிட்டு சென்ற விஷம் கலந்த டீ யை அருந்த வில்லை,  வீடு முழுவதும் அலசி ஆராய்ந்ததில் கணவரையும் கொள்ள விஷம் வைத்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து  கைது செய்யப்பட்ட கள்ளக்காதலன்  சுந்தரத்திடம் நடத்தப்பட்ட  விசாரணையில், பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதில், கணவரை கொள்ள  கள்ளக்காதலனும் அபிராமியும் விஷம் வாங்கியதாக கூறியுள்ளார். எப்போதும் கணவர்  ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்ததும்   டீ குடிப்பது வழக்கம், அதேபோல இரவு நேரத்தில் "டீ"  குடிப்பாராம். இதனால் கணவருக்காக பிளாஸ்கில் "டீ" கலந்து வைத்த அபிராமி அதில் விஷத்தையும் கலந்து வைத்து விட்டு சென்றுள்ளார்.

இதற்கு முன்னதாக கணவருக்கு போன் செய்த அபிராமி நீங்கள் எப்போது வீட்டிற்கு வருவீர்கள் எனக் கேட்டுள்ளார். மாதம் கடைசி  என்பதால் வேலை அதிகமாக உள்ளது என்பதால்  வர நேரமாகும் என சொல்லியுள்ளார். இதனையடுத்து அவர்  வீட்டுக்கு வரவில்லை , இதனால் முதலில் குழந்தைகளுக்கு  விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக் காதலனுடன் தலைமறைவானார் அபிராமி.