Asianet News TamilAsianet News Tamil

பால்வளத்துறையில் அடுத்தடுத்து அதிரடி திட்டம்... கோடிகளை ஒதுக்கீடு செய்த தமிழக அரசு...!

சேலம் பால் பண்ணையில் 7 லட்சம் லிட்டர் பால்பத திறன் விரிவாக்கம் & 30 மெ.டன் பால் பவுடன் திறன் ரூ.140 கோடி மதிப்பிலும், தஞ்சாவூர் பால்பண்ணையில் 1 லட்சம் லிட்டர் பால்பத திறன் ரூ.53 கோடி செலவிலும் திருச்சி பால்பண்ணை 6000 லிட்டர் ஐஸ் கிரீம் தயாரிக்கும் திறன் ரூ.43 கோடி மதிப்பிலும் சோழிங்கநல்லூர் மற்றும் அம்பத்தூர் பால்பண்ணை விரிவாக்கம் ரூ.71 கோடி மதிப்பிலும், செயல்படுத்தப்பட உள்ளது.

Aavin milk salem, madhavaram lot of project coming soon
Author
Chennai, First Published Jul 3, 2021, 8:09 PM IST

பால்வளத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் தலைமையில் பால்வளத்துறை மற்றும் ஆவின் நிறுவனத்தின் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. அதில் பால்வளத்துறைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.  

Aavin milk salem, madhavaram lot of project coming soon

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலம் ரூ.227 கோடி மதிப்பிலும், நபார்டு வங்கி மூலம் ரூ.180 கோடி மதிப்பிலும் இராஷ்ட்ரிய கோகுல் பிஷன் மூலம் ரூ.21 கோடி மதிப்பிலும், பால் பதப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் ரூ.687 கோடி மதிப்பிலும், ஒருங்கிணைந்த பால் பண்ணை மேலாண்மை திட்டம் மூலம் ரூ.18 கோடி மதிப்பிலும், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

Aavin milk salem, madhavaram lot of project coming soon

எதிர்காலத்தில் ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், மாதாவரம் பால்பண்ணையில் ரூ.142 கோடி செலவில் 10 லட்சம் லிட்டர் திறன் கொண்ட பால் பண்ணையாக விரிவு படுத்தும் திட்டம், சேலம் பால் பண்ணையில் 7 லட்சம் லிட்டர் பால்பத திறன் விரிவாக்கம் & 30 மெ.டன் பால் பவுடன் திறன் ரூ.140 கோடி மதிப்பிலும், தஞ்சாவூர் பால்பண்ணையில் 1 லட்சம் லிட்டர் பால்பத திறன் ரூ.53 கோடி செலவிலும் திருச்சி பால்பண்ணை 6000 லிட்டர் ஐஸ் கிரீம் தயாரிக்கும் திறன் ரூ.43 கோடி மதிப்பிலும் சோழிங்கநல்லூர் மற்றும் அம்பத்தூர் பால்பண்ணை விரிவாக்கம் ரூ.71 கோடி மதிப்பிலும், செயல்படுத்தப்பட உள்ளது.

Aavin milk salem, madhavaram lot of project coming soon

இனி வருங்காலங்களில் பாலில் வைட்டமின் ஏ மற்றம் டி ஆகிய நுண்ணூட்டங்களை செறிவூட்டவும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆவின் பால் மற்றும் பால் விற்பனை நிலையங்கள் அமைத்து விற்பனையை அதிகரிக்கவும், பால் உற்பத்தியாளர்களுக்கு மாதந்தோறும் குறை தீர்க்கும் கூட்டம் நடத்திடவும், இணையம் மூலம் நுகர்வோர் புகார்களுக்கு தீர்வுகாணும் திட்டத்தை செயல்படுத்தவும், பாலாடைக்கட்டி, திரட்டுப்பால், இளங்குழந்தைகளுக்கு பால் பவுடர், இனிப்பு இல்லாத பால்கோவா, கிரீக் யோகர்ட் போன்ற புதிய பால் பொருட்களை தயாரிக்கவும் உரிய பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பால் மற்றும் பால் உபபொருட்களை விரும்பி கேட்பதால் அவர்களை மையப்படுத்தி விற்பனை அதிகரிக்கப்படும் என பல்வேறு திட்டங்கள் குறித்து தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios