Asianet News TamilAsianet News Tamil

டெல்லியில் யாருடனும் கூட்டணி கிடையாது... பாஜகவை ஒத்தைக்கு ஒத்தையா எதிர்ப்போம்.. கெஜ்ரிவால் அதிரடி முடிவு!

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட ஆம் ஆத்மி விரும்பியது. ஆனால், டெல்லிக்கு வெளியே ஆம் ஆத்மியோடு கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டாததால், கூட்டணி அமையாமல் போனது. தேர்தலில் டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது.

AAP wont make alliance with anyone in delhi
Author
Delhi, First Published Jan 11, 2020, 8:19 AM IST

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.AAP wont make alliance with anyone in delhi
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட ஆம் ஆத்மி விரும்பியது. ஆனால், டெல்லிக்கு வெளியே ஆம் ஆத்மியோடு கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டாததால், கூட்டணி அமையாமல் போனது. தேர்தலில் டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவைக்கு பிப். 8 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான செய்தியகள் வெளியான நிலையில், அதை ஆம் ஆத்மி மறுத்துள்ளது. AAP wont make alliance with anyone in delhi
இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், “ டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. கூட்டணி அமைக்க எந்த கட்சியுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. டெல்லியில் தனித்து போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி வைத்து ஆம் ஆத்மி தேர்தலை சந்திக்க போவதாக வந்த செய்தி உண்மையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios