Asianet News TamilAsianet News Tamil

சென்னையே மூழ்க போகுது..! கருணாநிதிக்கு மெரினா கடலில் நினைவுச்சின்னமா..! கருத்து கேட்பு கூட்டத்தில் மோதல்

கடலுக்கு நடுவே 81 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள பேனா நினைவு சின்னம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் ஆம்ஆத்மி, சட்டபஞ்சாயத்து உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Aam Aadmi Party opposes setting up a memorial to Karunanidhi in the sea
Author
First Published Jan 31, 2023, 12:14 PM IST

கருணாநிதிக்கு நினைவு சின்னம்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க திமுக அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நினைவுச் சின்னம் கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. நினைவிடத்தில் இருந்து 290 மீ தூரத்திற்கும், கடற்கரையில் இருந்து 360 மீ தூரத்திற்கும் என 650 மீட்டர் தொலைவிற்கு கடலில் பாலம் அமைக்கப்படவுள்ளது. மேலும் கடலுக்குள் 42 மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்தது. இதனையடுத்து இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் பொருளை ஏலம் விடுவதை போல் தமிழகத்தில் அதிமுகவை ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்- ஸ்டாலின் கிண்டல்

Aam Aadmi Party opposes setting up a memorial to Karunanidhi in the sea

சுற்று சூழல் பாதிப்பு ஏற்படும்

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மீனவர்கள், அரசியல் கட்சியின் பரிதிநிதிகள் பங்கேற்றனர்.முதலில் பேசிய சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் அருள் முருகானந்தம், நான் மிகவும் மதிக்கும் தலைவர் கருணாநிதி. ஆனால் கடலுக்கு நடுவில் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறேன். சுற்று சூழல் பாதிக்கப்படும். நினைவிடம் வேறு இடத்தில் அமைக்கலாம் கூவம் நதி கடலில் கலக்கும் இடம் என்பதால் சுற்று சூழல் பாதிக்கப்படும். இறால் பெருக்கம் பாதிக்கப்படும். கடல் சூழலியல் பாதிக்கப்படும். கட்டுமானம் செய்யும் போது கொட்டப்படும் குப்பைகள் அகற்ற 15 ஆண்டுகள் ஆகும். கருணாநிதியை பெருமைப்படுத்த அமைக்கப்படுகிறதாக சொல்கிறீர்கள்.ஆனால் இது அமைந்தால் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் தான் விளைவிக்கும் என தெரிவித்தார். 

Aam Aadmi Party opposes setting up a memorial to Karunanidhi in the sea

கருத்து கேட்பு கூட்டம்- வாக்குவாதம்

அப்போது இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஒரு சிலர் சட்ட பஞ்சாயத்து இயக்கத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும் வெளியே போ வெளியே போ என கூச்சல் எழுப்பிய நிலையில்,  மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஒவ்வொருவரின் கருத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதால்தான் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது ஒருவர் பேசும்போது மற்றவர்கள் பேச வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

Aam Aadmi Party opposes setting up a memorial to Karunanidhi in the sea

மாணவர்கள் படிப்பு பாதிக்கும்

இதனையடுத்து கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி  ஜி.எம்.சங்கர்,வீனை வடிவத்தில் நினைவு சின்னம் அமைப்பது ஏன். தமிழ் மரபு பற்றி பேசும் நீங்கள், கர்நாடக இசை கருவிப்படி ஏன் வடிவமைக்கிறீர்கள். திட்டம் பகல் நேரத்தில் கட்டமைக்கப்படவுள்ளது. இதனால் ஒலி மாசு ஏற்பட்டு சென்னை பல்கலைகழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அரிய வகை புல் பாதிக்கப்படும் சென்னையே மூழ்க போகிறதாக சொல்கிறார்கள் மூழ்க போகும் இடத்தில். மூழ்க போகும் திட்டத்துக்காக எதற்காக 81 கோடி செலவு செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். 

இதையும் படியுங்கள்

இட நெருக்கடியால் அவதிப்படும் தலைமைச்செயலகம்.! ஓமந்தூராருக்கு மாற்ற திட்டம் போட்ட திமுக அரசு

Follow Us:
Download App:
  • android
  • ios