ஆம்ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ பாதுகாப்பு வாகனம் மீது 4முறை துப்பாக்கி சூடு நடத்தியதில் அதில் பயணம் செய்தவர் ஒருவர் இறந்தார். மற்றொருவர் காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் டெல்லி போலீசார் சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருக்கும் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து பார்த்து வருகிறார்கள்.


நரேஷ்யாதவ் வாகனம் மீது நடந்த துப்பாக்கி சூடு அரசியல் ரீதியாக நடக்கவில்லை.முன்விரோதம் கார்ணமாகவே இது நடந்திருக்கிறது.இதற்கிடையில் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆம்ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ் செதியாளர்களிடம் பேசும் போது.., 

'இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. என் மீதான தாக்குதலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. மர்ம நபர் எனது காரை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் என்னுடன் பயணித்த இரு தொண்டர்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இந்த துப்பாக்கிச்சூடு என் மீது மட்டும் குறி வைத்து நடத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. எனது காரை நோக்கி மட்டுமே சுடப்பட்டது. எனவே இதில் யார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. போலீஸார் முறையாக விசாரணை நடத்தினால், குற்றவாளி நிச்சயம் பிடிபடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.