முழுசா எதிர்க் கட்சியா உருவெடுத்த பாஜக.. கமலாலயத்தில் அலைமோத போகுது கூட்டம்.. அண்ணாமலை செம்ம பிளான்.
தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஜக தலைமை அலுவலகத்திலேயே அறை ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், மக்கள் தங்களது குறைகளை அவர்களிடம் மனுவாக கொடுக்கலாம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஜக தலைமை அலுவலகத்திலேயே அறை ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், மக்கள் தங்களது குறைகளை அவர்களிடம் மனுவாக கொடுக்கலாம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென பாஜக பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது, ஆனால் இதுவரை அக்கட்சியால் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெற முடிந்துள்ளது. அதிலும் கூட்டணி வைத்துள்ளதால் மட்டுமே இந்த வெற்றியும் கிடைத்திருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதே நேரத்தில் பாஜகவை தமிழகத்தில் தனித்துவமிக்க கட்சியாக உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து அக்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர. அந்த வரிசையில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சியில் அக்காட்சி செயல்பட்டு வருகிறது, இதற்காக அதிமுகவை காட்டிலும் திமுகவை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது, எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் எதிர்க்கட்சி வரிசையில் முதல் ஆளாக நின்று பாஜக எதிர்த்து வருகிறது.
இந்த வரிசையில் அதிக அளவில் பொது மக்களின் குறைகளை கேட்க பொதுமக்கள் மத்தியில் நெருக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக மக்கள் குறைதீர்க்கும் மக்கள் பிரஜைகள் என்ற திட்டத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னெடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
சென்னை தியாகராய நகரில் அமைந்திருக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். சிலர் குறைகளுடன் அரசின் நலத்திட்ட உதவி பெற மற்றும் புதிதாக பல சிந்தனைகளை அரசிடம் எடுத்துச் சொல்லும் நோக்கில் வருபவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும்.
தொகுதிக்கு அப்பாற்பட்டு நமது மாநிலத்தில் நலனுக்காகவும் பலமுறை நமது சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனர். நமது மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் பாராளுமன்றத்தில் தமிழக மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டு இருக்கிறார், இவற்றை கருத்தில் கொண்டே நமது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்களுக்கும், இதேபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர் காந்தி, சி.கே சரஸ்வதி அவர்களுக்கும் நமது தலைமை அலுவலகத்தில் அறைகள் வழங்கப்பட்டுள்ளது.
நமது பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து தங்கள் குறைகளுக்கு தீர்வு காண விரும்பும் மக்கள் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயலாளர் சந்திரன் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம், சந்திரன் அவர்களின் தொலைபேசி எண் 9445354922 . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.