கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு.? சட்டப்பேரவையில் தீர்மானம்
மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.
இட ஒதுக்கீடு வழங்கிடுக
தலித் கிறிஸ்தவர்களையும், தலித் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கும் தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிரதமருக்கு ஏற்கனவே கடிதமும் எழுதியுள்ளார். மதம் மாறிய கிறிஸ்வர்கள், இஸ்லாமியர்களுக்கு பட்டியல் இனத்தவர்களுக்கான சலுகைகளை வழங்குமாறு ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை முன்னதாக மத்திய அரசு நிராகரித்தது.இந்தநிலையில் மத்திய அரசை மீண்டும் வலியுறுத்ததும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற்ப்படவுள்ளது. தமிழக சட்ட பேரவையில் சுற்றுலா மற்றும் கலை பண்பாடு துறை மற்றும் ஐந்து சமய அறநிலைய துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது.
தீர்மானம் கொண்டு வரும் ஸ்டாலின்
விவாதத்தில் சட்டமன்ற கட்சிகளை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர. விவாதத்தின் நிறைவாக அமைச்சர்கள் ராமசந்திரன், மற்றும் சேகர்பாபு ஆகியோர் பதிலுரையாற்றி துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கபட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை பெறும் வகையில் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானத்தை முன்மொழிய உள்ளார். தீர்மானத்தின் மீது சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்த பின்னர் முதல்வர் கொண்டு வந்த தனி தீர்மானம் பேரவையில் நிறைவேற உள்ளது.
இதையும் படியுங்கள்