Asianet News TamilAsianet News Tamil

பாஜகவினர் சவால்..! கோவைக்குள் கால் வைத்து கெத்து காட்டும் ஆ.ராசா.! திமுக, தி.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

பாரதிய ஜனதா கட்சியனரின் எதிர்புக்கு மத்தியில் கோவைக்கு வந்த திமுக துணை பொதுச்செயலாளர் ஆ ராசாவிற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 

A Raja went to the Nilgari district and received an enthusiastic welcome from the volunteers along the way
Author
First Published Oct 16, 2022, 8:56 AM IST

ஆ ராசா பேச்சுக்கு எதிர்ப்பு

திமுக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். ஹிந்துவாக  இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் ? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற  அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்று பேசிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதனையடுத்து அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி... தமிழகத்தை ஆள்வது பழனிச்சாமியோ, பன்னீரோ இல்லை: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. மாஸ் காட்டிய உதயநிதி.

A Raja went to the Nilgari district and received an enthusiastic welcome from the volunteers along the way

பாஜக மாவட்ட தலைவர் கைது

காவல்நிலையத்திலும் ஆ.ராசா மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அப்போது கோவை மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி;- ஆ.ராசா போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் கோயம்புத்தூர் காலை வைத்து பாருடா நாயே.. அதே மாதிரி இந்து  சனாதனத்தை உடைக்கிறேன் மயிரை உடைக்கிறேன் எவனாவது வந்தீங்க பிஞ்ச செருப்பால அடிப்பேன் நாய்ங்களா. என்னடா மயிறு தெரியும் இந்து இந்து சனாதன தர்மத்தை பற்றி. அறிவு கெட்ட நாய்களா. திமுக இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என பகிரங்கமாக  கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி எச்சரிக்கை விடுத்தார். இந்த காட்சி சமூக வலை தளத்தில் பரவிய நிலையில் உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து ஆ.ராசா கோவை மாவட்டத்திற்குள் வருவரா என்ற கேள்வி எழுந்தது. 

இந்தி நடிகைகளை அழைத்துவர உதயநிதி புது டெக்னிக்.. இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை போட்டு பொளந்த அண்ணாமலை.

 

ஆ.ராசாவிற்கு உற்சாக வரவேற்ப்பு

இந்தநிலையில் நேற்று  சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் திமுக கட்சி தொண்டர்கள், தந்தை பெரியார் திராவிட கழகம், திராவிட விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்ப்பை பெற்ற ஆ.ராசா தனது தொகுதியான நீலகிரி சென்றடைந்தார். அதே நேரத்தில் ஆ. ராசாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மகளிர் அணி சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பாஜகவை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சர்ச்சைக்குரிய வகையில் ஆ.ராசா பேசியதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். 

இதையும் படியுங்கள்
 

பெரியகுளம் பண்ணை வீட்டில் முக்கிய ஆவணங்கள் கொள்ளையா..? அதிர்ச்சியில் ஓபிஎஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios