நாடாளுமன்ற மக்களவையில் நேற்று  பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்தில் நீலகிரி எம்.பி ஆ.ராசா பேசுகையில், “திராவிட பள்ளியின் மாணவன் என்ற முறையில் இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

அதே நேரத்தில்  அவர் தாக்கல் செய்த பட்ஜெட்  யாரராலும் ற்றுக்கொள்ள முடியாது என கூறிய ராசா, அரசின் திட்டம் என்ன? பட்ஜெட்டில் அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்ட செயல்திட்டங்கள் ஏதும் இல்லை என கூறினார்..

குடியரசுத் தலைவர் உரையையும், பொருளாதார அறிக்கையையும் படித்தேன். ஆனால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற செயல்திட்டம் என ஏதுமே இல்லை என்றார்.

இந்த அவையில் 15 பட்ஜெட்டுகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற ஒரு பட்ஜெட்டை பார்த்ததில்லை. இந்தியப் பொருளாதாரம் வேளாண்மையை அடித்தளமாகக் கொண்டது. ஆனால், கார்ப்பரேட்டுகள் மட்டும்தான் பொருளாதாரத்தை வளர்ப்பதாக இந்த அரசு நம்புகிறது என குற்றம்சாட்டினார்..

உள்நாட்டு முதலீடு, வேளாண்மை, உள்நாட்டு தொழில்துறைகள் ஆகியவற்றைதான் நாம் நம்பவேண்டும். ஆனால் இந்த அரசு பிரத்யேகமாக அந்நிய நேரடி முதலீடுகளை மட்டுமே நம்புகிறது. 

அடிப்படையில் இது தவறு. பாண்டிய மன்னனுக்கு புறநானூற்றில் பிசிராந்தையார் கொடுத்த அறிவுரை பற்றியும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார். வரி எவ்வாறு வசூலிக்கப்பட வேண்டும் என்பதை மட்டுமே பிசிராந்தையார் அறிவுறுத்துகிறார். ஆனால் வரி எங்கிருந்து வசூலிக்கப்பட வேண்டுமென்பதே நமது கவலை என கடுமையாக பேசினார்..

யாரிடம் வரி வசூலிக்க வேண்டும், யாருக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்கும் புறநானூற்றின் வரிகளுக்கும் தொடர்பில்லை. நிதியமைச்சரின் பிழையை திருத்தி திருக்குறளிலிருந்து சரியான வரிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என கூறிய ஆ.ராசா, ஈற்றலும் இயற்றலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு என்கிறார் திருவள்ளுவர். அதன் அடிப்படையில் இந்த பட்ஜெட் படுதோல்வி அடைந்துள்ளது என பேசினார்.

ஆ.ராசாவின் இந்தப் பேச்சு நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.