ரவுடிகள் பட்டியலில் இல்லாமல் குற்றங்களை மட்டும் செய்து வந்தவர்களை சென்னை காவல்துறை முதலில் வகைப்படுத்தி பட்டியலிட்டுள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் ரவுடிகளை கண்காணிப்பதற்கு ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ்காரர் என்ன நியமித்து அவர்கள் குறித்து முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தலைவிரித்தாடும் ரவுடியிசத்தை ஒழிக்க ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ் என்ற அடிப்படையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருவதாக சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக ரவுடிசம் மற்றும் கூலிப்படை கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுடனான கூட்டத்தில் ரவுடியிசத்திற்கு தமிழகத்தில் இடமில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அதை ஒழிக்கும் நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளார்.
தலைவலியான சட்ட ஒழுங்கு:
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது ஒவ்வொன்றையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் அரசுக்கு எதிராக இருந்து வருகிறது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ஆங்காங்கே கூலிப்படை கொலைகள், ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து போன்றவை அதிகரித்து விட்டது என்றும் மொத்தத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று அதிமுக- பாஜக உள்ளிட்ட கட்சிகள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: பதவிக்கு வந்து ஒரு வாரம்தான் ஆச்சு.. போகப்போக பாருங்க.. அசால்டு செய்த மேயர் பிரியா

ரவுடிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை :
இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை, வனத்துறை அதிகாரிகளுடனான மாநாடு முதலமைச்சர் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் முதல் நாள் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும், ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, போதைப் பொருள், பொருளாதார குற்றங்களுகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என கூறினார். சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் எவராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் அவர் உரையாற்றினார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் குற்றப்பின்னணி உள்ள நபர்கள் மற்றும் போதைப்பொருள் பின்னணியில் இருக்கும் நபர்கள் போன்றோரை கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
களமிறங்கிய போலீஸ்:
இந்நிலையில் சென்னையில் உள்ள ரவுடிகள் தொடர்பாக நடத்தப்பட்ட மறு கணக்கெடுப்பில் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதை எண்ணி யாரும் அச்சமடைய தேவையில்லை என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக செய்தியாளர் சந்தித்துள்ள அவர், ரவுடிகள் அவர்கள் புரிந்த குற்றச் செயல்கள் அடிப்படையில் அவர்களை வகைப்படுத்தி கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதன் மூலம் ரவுடியிசத்தை முடக்கும் தீவிர நடவடிக்கையில் சென்னை மாநகர போலீஸ் களமிறங்கியுள்ளது.
ரவுடிகள் பட்டியலில் இல்லாமல் குற்றங்களை மட்டும் செய்து வந்தவர்களை சென்னை காவல்துறை முதலில் வகைப்படுத்தி பட்டியலிட்டுள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் ரவுடிகளை கண்காணிப்பதற்கு ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ்காரர் என்ன நியமித்து அவர்கள் குறித்து முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: பாமக.. இதோடு நிறுத்திக்க .. என்ன? சூர்யாவை மிரட்டி பார்க்கிறீர்களா.?? பயங்கரமா எச்சரித்த கம்யூனிஸ்ட்.

போலீஸ்காரர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பணியாக இதை பார்த்து வருவார்கள், அதன் மூலம் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுடிகளின் செயல்பாடுகளை குறித்த தகவல் நேரடியாக அதிகாரிகளுக்கு கிடைக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு உத்தரவிடுவார்கள். இதன்மூலம் ரவுடியிசம் மற்றும் அதனால் நடக்கும் சம்பவங்கள் முழுமையாக ஒழிக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
