ரஜினி மீது பாயும் புது வழக்கு! மீசை முறுக்கும் வழக்கறிஞர்: கலங்கிக் கதறும் ‘அண்ணாத்த’.
அந்த குடியிருப்புகளையோ எரிச்சது சாமான்ய மக்களே கிடையாது. டெஃபனேட்லி விஷக்கிருமிகள்தான். அவங்களோட வேலைதான் இது. இது எப்படி தெரியும்னு கேக்கவேணாம். எனக்கு தெரியும் எல்லாம்.” என்று வீராவேசமாக பேசினார்.
தவளை மட்டுமல்ல ரஜினிகாந்தும் தனது வாயால் கெடுவார்! என்பது பல முறை அவராலேயே நிரூபிக்கப்பட்ட உண்மைதான். தனது சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் எவ்வளவோ இம்சைகளையும், எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் அள்ளியள்ளி வாங்கிக் கட்டிக் கொண்டவர் ரஜினிகாந்த். தனக்குத் தானே அவர் வைத்துக் கொண்ட சூப்களில் மிக மிக கொதிப்பானது ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அவர் சொன்ன ‘சமூக விரோதிகள்! விஷக்கிருமிகள்!’ எனும் பஞ்சாயத்துதான்.
அதாவது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற அங்கே சென்றார் ரஜினி. பின் நிருபர்களிடம் பேட்டி கொடுக்கையில் ‘ஸ்டெர்லைட் போராட்டத்துக்குள்ளே சமூகவிரோதிகள் நுழைஞ்சிருக்காங்க. டெஃபனேட்லி அந்த கலெக்டர் ஆபீஸையோ, அந்த குடியிருப்புகளையோ எரிச்சது சாமான்ய மக்களே கிடையாது. டெஃபனேட்லி விஷக்கிருமிகள்தான். அவங்களோட வேலைதான் இது. இது எப்படி தெரியும்னு கேக்கவேணாம். எனக்கு தெரியும் எல்லாம்.” என்று வீராவேசமாக பேசினார்.
ரஜினியின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழகத்தில் ரத்தம் கொதித்தது பல லட்சம் பேருக்கு. ‘போராளிகளை விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் என்பதா? எல்லாம் தெரியுமென்றால் நீதிமன்றம் வந்து அதை சொல் ரஜினி’ என்று கடுமையாக சாடினர். இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு விவகாரத்தை விசாரிக்கும் ஒரு நபர் கமிஷன் இன்று (பிப்ரவரி 25) அவர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதிலிருந்து விலக்கு கோரினார். ’நான் அங்கே ஆஜராக வந்தால் என் ரசிகர்கள் கூடுவார்கள், சட்ட ஒழுங்கு பிரச்னை உருவாகும், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும். எனவே எழுத்துப் பூர்வமாக கேள்விகள் கேட்டால், நானும் எழுத்துப் பூர்வமாக விளக்கமளிக்கிறேன்.’ என்றார். இது பெரும் பஞ்சாயத்து ஆனது.
இன்று ஆணையத்தின் முன் ரஜினி ஆஜராகவில்லை. மாறாக அவரது சார்பில் அவரது வழக்கறிஞரான இளம் பாரதி ஆஜரானார். ரஜினி ஏற்கனவே ஒப்புக் கொண்ட சினிமா ஷூட்டிங் பணிகள் இருப்பதும் இன்று வராமைக்கு காரணமாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும். அவர் ஆஜராகவேண்டும்! என்று சொல்லப்பட்டுள்ளது. இதெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த வழக்கில் ரஜினியையும் ஒரு சாட்சியாக சேர்க்க மிக முக்கியமாக உழைத்தவர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.
அவர் தன் பேட்டியில் ரஜினியை செமத்தியாக சுளுக்கெடுத்திருக்கிறார் இப்படி...“விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராக ரஜினிக்கு பயம். ஏன்னா, அவர் அன்னைக்கு சத்தியத்தை, தர்மத்தைப் பேசலை. இப்ப விசாரணைக்கு வந்தால்,குறுக்கு விசாரணையில் தன் குட்டு வெளிப்பட்டுவிடும் அப்படின்னு பயப்படுறார். விசாரணைகு அவர் ஆஜராக வருகையில் நாங்கள் நிச்சயம் அவரை குறுக்கு விசாரணை செய்வோம். யார் அந்த சமூக விரோதிகள்? உங்களுக்கு தெரியும்தானே, அடையாளம் காட்டுங்கள் அவர்களை! என்று கேட்போம் ரஜினியை. எங்களின் குறுக்கு விசாரணைக்குப் பயந்துதான் விசாரணைக்கு வர மறுக்கிறார் ரஜினி. ஒன்று அவர் இங்கே வந்து கூண்டில் ஏறி விளக்கம் அளிக்க வேண்டும். அல்லது, ’அன்று நான் சொன்னது பொய்’ என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லேன்னா, நல்வாழ்வு உரிமைக்காக போராடிய மக்களை சமூக விரோதிகளாக சித்தரித்த ரஜினி மீது வழக்கு போடுவோம்.” என்று எக்ஸ்ட்ரா பாம் போடுகிறார். ஹும், எப்படி போனாலும் அணைகட்டுறாங்களே ‘அண்ணாத்தே’வுக்கு.