Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவுக்கு ஒரு நியாயம்.மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? கேள்வி கேட்கும் கே.எஸ் அழகிரி.!!

அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்க, அதிமுகவுக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுமா? கே.எஸ். அழகிரி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 

A justification for the AIADMK? KS cries of questioning !!
Author
Tamilnádu, First Published Apr 21, 2020, 8:48 PM IST

T.Balamurukan

அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்க, அதிமுகவுக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுமா? கே.எஸ். அழகிரி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு நடத்தி வரும் அம்மா உணவகங்கள் அனைத்திலும் அதிமுக சார்பில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.முதல்வரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்திருக்கிறார்.

A justification for the AIADMK? KS cries of questioning !!

அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்க, அதிமுகவுக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

"அம்மா உணவகம் என்பது அரசுக்கு சொந்தமானது. அதை ஆளுங்கட்சி தமக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடாது. அப்படி மீறி பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகமாகும்" என்று தமது அறிக்கையில் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.அதிமுகவை விளம்பரப்படுத்தும் நோக்கில் அம்மா உணவகங்களை பயன்படுத்தும் தமிழக அரசின் செயல் குறித்து திமுகவும் கேள்வி எழுப்பியுள்ளது.

 

"ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தில், அரசியல் கட்சியினரோ, தன்னார்வ அமைப்புகளோ பொதுமக்களுக்கு நேரடியாக நிவாரண நிதி அளிக்கக் கூடாது என்று தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது.கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது".
 

Follow Us:
Download App:
  • android
  • ios