தன் முன்னாள் காதலியுடன் அடிக்கடி ஊர் சுற்று உல்லாசம் அனுபவித்து வந்த நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன் முன்னாள் காதலியுடன் அடிக்கடி ஊர் சுற்று உல்லாசம் அனுபவித்து வந்த நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள், அதற்கு காரணம் அது சாதி மதம் இனம் மொழி அழகு என எதையும் பார்த்து வராது என்பதுதான் அதன் பொருள். ஆனால் இப்போது அது தலைகீழாக மாறியுள்ளது என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு அது சுய நலம், போலீ என மாறி வருகிறது. அதே நேரத்தில் இளைஞர்கள் முறையற்ற காதல் வயப்பட்டு தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது, சிலர் காதலிப்பதை வாழ்க்கையில் ஒரு ஸ்டேட்டஸ் ஆக கருதுகின்றனர். சிலர் ஒரே நேரத்தில் பலரை காதலிக்கின்றனர். ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவருடன் உறவு வைத்துக் கொள்கின்றனர். காதல் என்ற பெயரில் காம களியாட்டங்களும் அரங்கேறுகிறது, சில நேரங்களில் உயிருக்குயிராக பழகும் நண்பர்களையும் ஏமாற்றும் அளவிற்கு இந்த காதல் கொண்டு போய் விடுகிறது.

அதுபோன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரம் ஜீத் சிங் இவருக்கு ஒரு இளம் பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. ஆனால் ஒரு சில மாதங்களில் இவர்கள் இருவரும் பிரிந்தனர். இருவரும் பேசிக் கொள்வதை நிறுத்தினர். இந்நிலையில் அந்தப் பெண் பரம் ஜீத் சிங்கின் நண்பன் தீபக்கிடம் பேச ஆரம்பித்தார், தீபக்கும் அந்தப் பெண்ணும் அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று வந்தார், பரம்ஜீத்திற்கு இந்த விஷயம் தெரிந்தது. இதனால் தனது நண்பன் தீபக் மற்றும் முன்னாள் காதலி ஆகியோர் மீது அவர் கோபத்தில் இருந்தார். தான் காதலித்த பெண்ணுடன் நண்பன் உறவு கொள்வதை பரம் ஜீத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, இந்நிலையில் தீபக்கை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அப்போது பரம்ஜீத் தீபக் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தயாராக இருந்த பரம் ஜீத் தீபக்கின் தலையில் கட்டையால் அடித்தார்.

அங்கே அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார், உடனே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தீபக்கை குத்தினார். இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தீபக் உயிரிழந்தார். இதனையடுத்து பரம் ஜீத் சிங், தீபக்கின் சடலத்தை சாக்குப்பையில் கட்டி காட்டிற்கு கொண்டுசென்று தீயிட்டுக் கொளுத்தினார். இந்நிலையில் தீபக்கின் மாமா சீதா ராம் யாதவ் தீபத்தை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது பரம்ஜீட் சிங் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது, இந்நிலையில் பரம் ஜீத்தை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். தீபக்கை கொலை செய்த குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார். தனது முன்னாள் காதலியுடன் தீபக் தொடர்பில் இருந்ததால் அவரை தான் கொன்றதாக அவர் கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
