கே.எஸ்.அழகிரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.!டெல்லியில் புகார் மனுவோடு முகாமிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள்
தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மோதிக்கொண்ட நிலையில், இதற்க்கு காரணமான மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
காங்கிரஸ் அலுவலகத்தில் மோதல்
தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஏராளமான தலைவர் உள்ளனர். ஒவ்வொரு தலைவர்களுக்கும் மற்ற தலைவர்களோடு ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கும். அந்த வகையில், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் கடந்த 15ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. சத்யமூர்த்தி பவனில் பிரச்சனையில் ஈடுபட்ட நிர்வாகிகளை கே.எஸ்.அழகிரி வெளியேற்றினார். இதனையடுத்து இந்த பிரச்சனைக்கு காரணமான சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டேன் டீ தேயிலை தோட்டத்தை திட்டமிட்டு முடக்கப்பார்க்கிறது தமிழக அரசு... அண்ணாமலை குற்றச்சாட்டு!!
டெல்லியில் தமிழக காங். நிர்வாகிகள்
இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திராகாந்தி பிறந்தாளையொட்டி அவரது சிலைக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மற்ற காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கவில்லை, சிறிது நேரத்திற்கு பிறகு மூத்த தலைவர்கள் இவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, செல்வப்பெருந்தகை என தனியாக இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போதே இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்து. இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை நீக்க கோரி தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தங்கபாலு, இவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து புகார் மனு அளித்ததாகவும், அந்த மனுவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இருந்த போதும் இந்த பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என மல்லிகார்ஜூன கார்கே கூறியதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்