கழுவி கழுவி ஊற்றி விட்டு.. பணத்திற்காக சுயமரியாதையை அடகு வைத்தவர் கோமாளியா? உத்தமன் அண்ணாமலை கோமாளியா? BJP
கோட்டை ஈஸ்வரன் கோயிலில் கந்த கஷ்டி கவசம் படித்ததை உலகத்தில் இங்கே தான் பார்த்து இருப்பீர்கள். இது பொன்ற கோமாளி தனம் வேறு எதுவும் இருக்காது.
கோட்டை ஈஸ்வரன் கோவிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படித்தததை விட கோமாளித்தனம் வேறு என்ன இருக்க முடியும்? என அண்ணாமலை விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி;- கோட்டை ஈஸ்வரன் கோயிலில் கந்த கஷ்டி கவசம் படித்ததை உலகத்தில் இங்கே தான் பார்த்து இருப்பீர்கள். இது பொன்ற கோமாளி தனம் வேறு எதுவும் இருக்காது. அரசியல் கோமாளியின் செய்திகளை என்னிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க;- திருமாவளவனை கைது செய்ய வேண்டும்..! மதம், சாதி மோதல் ஏற்பட்டால் தமிழக அரசே பொறுப்பு- பாஜக
உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஸ்டி அவர். தொலைக்காட்சிகளில் முதலமைச்சர் செய்திக்கு முன்பாக கோமாளியின் செய்திகள் தான் முதலில் வருகிறது என கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- ஊழல் பேர்வழி, ஆள்கடத்தல் பேர்வழி, நில அபகரிப்பு மோசடி நபர், கேடு கெட்டவன், என்றெல்லாம் கழுவி கழுவி ஊற்றி விமர்சித்த நபரையே வெட்கம், மானம், சூடு, சொரணை என்ற எதுவேமேயில்லாமல் பதவிக்காக, பணத்திற்காக சுயமரியாதையை அடகு வைத்து தலைவராக ஏற்று கொண்ட உன்மத்தன் கோமாளியா? அல்லது ஈஸ்வரன் கோவிலில் உள்ள முருகன் சந்நிதியின் முன்பு நாட்டு மக்களின் நன்மைக்காக, அமைதிக்காக கந்த சஷ்டி கவசம் படித்த உத்தமன் கோமாளியா? நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க;- கோவை குண்டு வெடிப்பில் கோமாளித்தன அரசியலை அரங்கேற்றுவது திமுகதான்… நாராயணன் திருப்பதி கடும் விமர்சனம்!!