ஜெயலலிதா மரணம் விசாரணை அறிக்கை எப்போது வெளியிடுவது..? தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவு..?

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், ஆன் லைன் சூதாட்ட தடை, பரந்தூரில் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படவுள்ளது. 

A cabinet meeting will be held today evening under the chairmanship of Chief Minister M K Stalin

அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.  குறிப்பாக சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என்று தெரிகிறது. பரந்தூரில் விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சினை தொடர்பக எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம்? என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. அதேநேரத்தில் பரந்தூரில் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பாகவும், அவர்களுக்கு இழப்பீடு மற்றும் மேலும் சில சலுகைகள் வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அண்ணன் பழைய பாசத்தோடு சொல்றேன் கேளு தம்பி...! ஆர் பி உதயகுமாருக்கு அறிவுரை வழங்கிய டிடிவி தினகரன்

A cabinet meeting will be held today evening under the chairmanship of Chief Minister M K Stalin

முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இதுதொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கையை சட்ட சபையில் வைப்பதா? அல்லது நேரடியாக மக்கள் பார்வையில் வெளியிடுவதா? என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையும் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டள்ளது. இந்த அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டப்போதிலும், எப்போது சட்டசபையை கூட்டலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வது குறித்த அவசர சட்டம் நிறைவேற்றுவது சம்பந்தமாகவும் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் பாஜக..? பகல் கனவு ஒரு காலமும் நிறைவேறாது- வைகோ ஆவேசம்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios