பெற்றோர்கள் வீட்டில் இல்லாதபோது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஆந்திர மாநில  பழங்குடியினர்  நலத்துறை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது .   ஆந்திர மாநிலம் அனந்தகிரி பழங்குடியினர் நலத்துறை ஊழியராக இருந்து வருகிறார் சர்வேஸ்வரா ராவ் ,  இவர் அங்கு இளநிலை உதவியாளராக உள்ளார் . பழங்குடியினர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வது போன்றவை  பழங்குடியின நலத்துறையின் பணியாக இருந்து வருகிறது .

 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பழங்குடி நல துறை இளநிலை உதவியாளர் சர்வேஸ்வரர் தனது நண்பர்கள் மூவருடன்  சிறுமியின் இல்லத்திற்கு சென்றுள்ளார்,   அப்போது அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார் ,   அவரது குடும்பத்தினர் பணி நிமித்தமாக பக்கத்து ஊர் சென்றிருந்தனர்,   அதைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர்,   அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக் கொடுப்பது போல கொடுத்து அவர் வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

 

பின்னர் அந்த சிறுமியை  அவர்  பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது .  இந்நிலையில் அந்த சிறுமி தனக்கு  நடந்தது குறித்து பெற்றோர்களிடம்  தெரிவித்தார் ,  ஆனால்  இதுகுறித்து போலீசுக்கு சென்றால் அதிகாரிகள் தங்களை எதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்த அவர்கள்,   காவல் நிலையத்திற்கு செல்வதை தவிர்த்துள்ளனர் .  இந்நிலையில் அந்தச் சிறுமி  பயிலும் பள்ளியின் ஆசிரியர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ,  உடனே இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் பழங்குடியினர் நலத்துறை ஊழியர் சர்வேஸ்வர ராவ் மீது  போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகள் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்.