90 percent people welcoming green ways road project - BJP MP ila.Ganesan

விருதுநகர்

பசுமை வழிச் சாலையை 90 சதவீதம் மக்கள் வரவேற்கின்ற்னர் என்று பாஜக எம்.பி இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க எம்.பி.இல.கணேசன் வந்திருந்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "சென்னை – சேலம் எட்டு வழி பசுமைச் சாலைக்கு 90 சதவீத பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

மக்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. சாலை அமைக்க எடுக்கும் இடங்களில் விவசாய நிலங்கள் குறைவு. அந்த நிலத்தின் மதிப்புக்கு அதிகமான ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் சிலர் பிரச்சனையை தூண்டுகிறார்கள் என்பது தெரிகிறது.

ஜி.எஸ்.டி. வெற்றிகரமாக ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்த வரியால் எதிர்பார்த்த அளவை விட அதிகமான வருமானம் கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி. இன்னும் முழுமை அடையவில்லை. அதிகமான வரி உள்ள பொருட்களுக்கு இன்னும் வரி குறையும். நேர்மையாக வரி செலுத்துபவர்கள் ஜி.எஸ்..டி.யை வரவேற்றுள்ளனர்.

ராஜ்யசபாவில் பேச வாய்ப்பு கிடைக்குமபோது எல்லாம் பட்டாசு தொழிலுக்கு வரி விலக்கு குறித்து பேசினேன். வரி விலக்கு கிடைத்தால் பட்டாசு தொழில் மேம்படுவதுடன் அன்னிய செலாவணியும் அதிகரிக்கும்.

எதிர்க்கட்சியான தி.மு.க.வின் முதல் வார்த்தை திராவிடம், இரண்டாவது வார்த்தையான முன்னேற்றம் என்பது அர்த்தமற்றதாகிவிட்டது. வெறும் கழகம் மட்டுமே உள்ளதாக கருதுகிறேன்" என்று அவர் கூறினார்.