89 crores documents seized in vijaybaskar house
சென்னை ஆர்,கே.நகரில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தினகரன் சார்பில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு 4000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது வணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தினகரன் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து நேற்று அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அவரது வீட்டில் இருந்த ஏராளமான ஆவணங்கள் அள்ளிவரப்பட்டன. தற்போது அந்த ஆவணங்கள் வெளியாகியுள்ளன.
அதில் ஒரு ஓட்டுக்கு 4000 வீதம் 85 சதவீத வாக்காளர்களை இலக்காக் கொண்டு 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

மேலும் அந்த ஆவணங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தங்கமணி,வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார் ஆகிய 6 அமைச்சர்களது பெயர்களும் இடம் பெற்றிருப்பதும் ஆவணங்கள் மூலம் தெரிய வந்தள்ளது.

இந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் ஆதாரமாக வழங்க வருமான வரித்துறையின் திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தலாமா அல்லது ஒத்தி வைக்கலாமா அல்லது தினகரனை தகுதி இழப்பு செய்யலாமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
