பிலிப்பைன்ஸ் , தாய்லாந்து உட்பட முகவர்கள் மூலமாக வெளிநாடு சென்று மருத்துவம் பயிலும்  மாணவர்கள் குறித்த விவரங்களை தயார் செய்து வருகிறோம். மற்ற படிப்புகள் போல் இல்லாமல் , ஆன்லைன் வழியில் படிப்பதை மருத்துவப் படிப்பில் ஏற்க மாட்டார்கள்  என்பது போன்ற சூழல் இருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 87 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது என்றும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தியோரில் 2-3 விழுக்காட்டினர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக செவித்திறன் நாள் குறித்த கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கடந்த 2ஆண்டுகலாக கொரோனா வேகமான பரவலாக இருந்து வரும் நிலையில் எப்போது இல்லாத அளவுக்கு நேற்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையாக 320 என்றளவில் குறைந்துள்ளது.

இதை ஜீரோ வாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்ற அவர், தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 3 வாரமாக நடைபெறாமல் இருந்த மெகா தடுப்பூசி முகாம் இந்த சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில், 23 வது முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் 2037 அரசு , தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வழங்கினர், தற்போது 208 மருத்துவமனையில் மட்டுமே கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார் பின்னர் இந் நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் , 

" தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் 92 விழுக்காட்டினர் முதல் தவணையும் , 72 விழுக்காட்டினர் இரண்டாம் தவணையும் செலுத்தியுள்ளனர்.1 கோடிக்கும் மேற்பட்டோர் 2ம் தவணை செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்தியோரில் 2-3 விழுக்காட்டினர் மட்டுமே கொரோனாவால் மரணமடைந்தனர். 

பிலிப்பைன்ஸ் , தாய்லாந்து உட்பட முகவர்கள் மூலமாக வெளிநாடு சென்று மருத்துவம் பயிலும் மாணவர்கள் குறித்த விவரங்களை தயார் செய்து வருகிறோம். மற்ற படிப்புகள் போல் இல்லாமல் , ஆன்லைன் வழியில் படிப்பதை மருத்துவப் படிப்பில் ஏற்க மாட்டார்கள் என்பது போன்ற சூழல் இருக்கிறது. 

எனவே உக்ரைன் மாணவர்களை முழுமையாக மீட்டு வந்த பிறகு அவர்களின் தேவைகளை கேட்டறிந்து அதற்கேற்ப அவர்களின் படிப்பு முறைகள் குறித்து நடவடிக்கைகள் எடுப்போம். என்றார். அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் குறித்த செய்தியார்கள் கேள்வி எழுப்பியதற்கு "நல்ல விசயம் பற்றி பேசுகிறோம் இப்போது ஜெயகுமார் குறித்து ஏன் கேள்வி கேட்கிறீர்கள் " என்று கூறினார்.