தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 235 கம்பேனி துணை இராணுவ படையினர் வரும் 28 ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.  

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 235 கம்பேனி துணை இராணுவ படையினர் வரும் 28 ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளார்களிடம் தகவல் தெரிவித்த தலைமை தேர்தல் அதிகாரி சாகு, சிவிசில் ஆஃப் மூலமாக 2 ஆயிரத்து 313 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதில் 1607 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கரூர், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து அதிகமான புகார் வருவதாகவும் அவர் கூறினார். இதில் கரூர் மாவட்டத்தில் 487 புகார்களும், கோயமுத்தூர் 365 புகார்களும், திருப்பூர் மாவட்டத்திலிருந்து 131 புகார்களும், சென்னையில் 130 புகார்களும் வந்துள்ளன. 

இது வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் 18 ஆயிரத்து 714 துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளதாகவும் சத்யபிரத சாகு தெரிவித்தார். சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஓய்வு பெற்ற காவலர்கள், இராணுவ வீரர்களை பயன்படுத்தி கொள்வதற்கு காவல் துறை அனுமதி கோரியுள்ளது. தற்போது 65 கம்பெனி துணை இராணுவ படையினர் வந்துள்ளதாகவும், மேலும் 235 கம்பெனி துணை ராணுவப்படையினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 28 ம் தேதி தமிழகம் வரவுள்ளதாகவும் சாகு கூறினார். 

முசிறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் காரில் 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.10 லட்சத்திற்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரி துறை விசாரணை மேற்கொண்டு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில் முசிறியில் கைபற்ற பணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருதாக கூறினார். மேலும், 4.5 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் சாகு தெரிவித்தார்.