8 way road required! Agriculture does not affect! Dr.Krishnasamy

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படாது என்றும், மாநில வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை அவசியம் என்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

சேலம் - சென்னை 8 வழி சாலை அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

8 வழிச்சாலை அமைப்பதற்கு அந்தந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 8 வழிச்சாலை உறுதியாக அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கூறியிருந்தார்.

எதிர்கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் 8 வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 8 வழிச்சாலை அமைப்பதால் விவசாயம் பாதிக்காது என்று கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில், டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 8 வழிச்சாலை அமைப்பதால் விவசாயம் பாதிக்காது என்று கூறினார். மாநில வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை அவசியம் என்றும் 8 இடங்களில் 8 வழிச்சாலை தேவை என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.