திமுக கூட்டணியில் தனதுகட்சியான மதிமுகவுக்கு 8 இடங்கள் கிடைக்கும் என  அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் தனதுகட்சியான மதிமுகவுக்கு 8 இடங்கள் கிடைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோதிமுக கூட்டணிக்கு தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார். கட்சியின் அங்கீகாரம் மற்றும் தனி சின்னம் பெறுவதற்காக 12 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உள்ளதே என்ற கேள்விக்கு 8 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலே கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் நல்லதையே நினைப்போம் எனவும் வைகோ தெரிவித்தார்.