Asianet News TamilAsianet News Tamil

சற்றுமுன் அதிரடி, பள்ளிகளுக்கு எட்டு நாள் விடுமுறை..!! கல்வித்துறை அறிவிப்பு..!!

வரும் 24 ஆம் தேதி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நிறைவு பெறுகிறது அன்று முதல், அக்டோபர் 2 வரை மொத்தம் எட்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறினார்.
 

8 days leave for school ,students and teachers happy
Author
Chennai, First Published Sep 16, 2019, 2:34 PM IST

திட்டமிட்டபடி பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கண்ணன்  தெரிவித்துள்ளார், சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை கண்டு மாணவர்கள் குழப்பமடைய தேவையில்லை என்றும்  அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

8 days leave for school ,students and teachers happy

அதாவது , தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த  பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் சார்பில் கடந்த   09.09.2019 அன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது அதில்,   மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்தநாள் நினைவு விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு அனைத்துவகைப் பள்ளிகளிலும் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை மற்றும் காந்திய மதிப்புகளை மையமாக வைத்து  வரும் 23.09.2019 முதல் 02.10.2019 வரை செயல்திட்டங்கள் வழங்கி பள்ளிகளில் செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது காந்தியடிகளில் வாழ்கை வரலாற்று சிறப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கலை நிகழ்ச்சிகள் அல்லது செயல்பாட்டு முறைகளை செய்ய வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சம். 

8 days leave for school ,students and teachers happy

இந்த உத்தரவால் காலாண்டு விடுமுறை பாதிக்கப்படுமா.?  என்ற ஐயம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தாண்டு பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை ரத்தாகப்போகிறாதா என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.  இது மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில் பள்ளிகல்வித்துறை செயலாளர். அத்தகவலை  திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஆண்டின் துவக்கத்திலேயே இந்தாண்டு எத்தனைநாட்கள் பள்ளிகள் நடைபெற வேண்டும் எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டு வைத்துள்ளதாக கூறினார்.

8 days leave for school ,students and teachers happy 

எனவே அதன்படி  பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நிச்சயம் அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.  உண்மைக்கு புறம்பாக சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை மாணவர்கள் யாரும் நம்ப என்று கேட்டுக்கொண்ட அவர், வரும் 24 ஆம் தேதி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நிறைவு பெறுகிறது அன்று முதல், அக்டோபர் 2 வரை மொத்தம் எட்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios