இறுதி கட்டமாக உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்பட 8 மாநிலங்களைச் சேர்ந்த 59  நாடாளுமன்றத் தொகுதிகளில் காலை 7 மணிக்குத் தொடங்கி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
 நாடு முழுவதும் ஏப்ரல் 11 தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகின்றன. ஆறு கட்டத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையி, ஏழாவது கட்டமாக இறுதி கட்டத் தேர்தல் இன்று தொடங்கியது. இன்று நடைபெற உள்ள தேர்தலில் பீகார் 8, ஜார்கண்ட் 3, மத்தியப்பிரதேசம் 8, பஞ்சாப் 13, மேற்கு வங்காளம் 9, சண்டிகர் 1, உத்தரப்பிரதேசம் 13, இமாச்சல் பிரதேசம் 4 ஆகிய மா நிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.
59 தொகுதிகளில் 918 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். 10.17 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளார்கள். காலை 7 மணிக்குத் தொடங்கிய தேர்தல் மாலை 6 மணிவரை விடாமல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு முன்பாகவே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துவருகிறார்கள். தேர்தலையொட்டி துணை ராணுவப் படையினரும் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த மேற்கு வங்காளத்தில் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாட்னா சாகிப் தொகுதியிலும் தேர்தலை எதிர்கொள்கிறார்கள். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்துவருகிறார்கள்.