தமிழகத்தின் பொருளாதாரத்தைச் சீரமைக்க 7 முக்கியமான செயல் திட்டங்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் அறிவித்தார். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரண்டாம் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், தமிழகத்தின் பொருளாதாரத்தை டிரில்லியன் அளவுக்கு எட்டுவதற்கான 7 செயல் திட்டங்களை அறிவித்தார்.


இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில், “கிராம பஞ்சாயத்து முதல் முதலமைச்சர் அலுவலகம் வரை காகிதங்களற்ற அலுவலகங்கள் என்கின்ற முக்கிய திட்டத்தை அறிமுகப்படுத்துவோம். காகித கோப்புகளை தடை செய்து அதனால் ஏற்படும் தாமதங்களை நீக்கி இணையவழியில் நேர்மையான வெளிப்படையான துரிதமான அரசு அமைவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்படுத்துவோம்.
இணைய தொடர்பு என்பது மக்களின் அடிப்பைடை உரிமையாக அறிவிக்கப்பட்டு அதற்கான முன்னெடுப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைய வசதி செய்து கொடுக்கப்படும். இது வரை இல்லாத அளவில் ஒரு அரசின் மிகப்பெரு முதலீடாக இது அமையும்.
கிராமப்புரங்களில் இருக்கும் மனித வள ஆற்றலை சரியாக பயன்படுத்தும் வகையில் தொழில் முனைவோர்களையும் தொழில் நிறுவனங்களையும் நகர்புரங்களுக்கு இணையாக கிராமபுரங்களில் தங்கள் கிளை அலுவலகங்கங்களை அமைக்கும்படி எங்கள் அரசு வலியறுத்தும்.