காசி தமிழ்ச் சங்கமம்..! தொழில் முனைவோர்களுடன் கோவையில் இருந்து புறப்பட்ட 5வது ரயில்
காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம் மற்றும் கலாச்சார தொடர்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு துவங்கியுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான 5வது ரயில் சேவை கோயம்புத்தூரில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்டு சென்றது.
காசி தமிழ் சங்கமம்
காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பாக ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’நிகழ்ச்சி, வாரணாசியில் நடைபெற்று வருகிறது. கடந்த 17ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி டிசம்பர் 16ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து ஒரு மாத கலாத்திற்கு வாரணாசியில் அறிஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த ஆன்மிகவாதிகள் பங்கேற்க்கும் வகையில் தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பயணம் செய்ய உள்ளனர்.
அன்று எதிர்ப்பு..! இன்று கட்டாயமா..? மக்களை துன்புறுத்தும் திமுக அரசு..! இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்
தொழில் முனைவோர்களோடு காசிக்கு ரயில்
இந்தநிலையில் ஏற்கனவே 4 ரயில் சேவைகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 5 வது ரயில் பயணம் இன்று காலை கோவையில் இருந்து தொடங்கியது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொன்மையான நாகரிக பிணைப்பையும், அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் வகையில், மத்திய அரசு நடத்திவரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து செல்லும் 5வது ரயிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 90 பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் தங்களது பயணத்தை இன்று துவங்கினர். கடந்த 20ம் தேதி கோவையிலிருந்து சென்ற ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்... வைகோ அதிரடி கருத்து!!
வழியனுப்பி வைத்த பாஜக
இன்று கோவையிலிருந்து கிளம்பியுள்ள ரயிலில் வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பலர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவை ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை பாரதிய ஜனதா கட்சியினர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர். காசி தமிழ் சங்கமம் ரயில் சேவை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை துவங்கப்படுவதையடுத்து ரயில்வே மற்றும் மாநகர காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படியுங்கள்
ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு..! தொண்டர்களுக்கு திடீர் உத்தரவிட்ட எடப்பாடி பழனிசாமி