515 new buses costing Rs.134 crores
தமிழ்நாட்டில் முதன் முறையாக பயோ டாய்லெட் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய நவீன பேருந்து சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொடி அசைத்து துவக்கி வைத்தார். ரூ.134 கோடி ரூபாய் செலவில் 515 புதிய குளிர்சாதன பேருந்துகள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தன.
பச்சைநிற வண்ணத்தில் இயக்கப்பட்டு வந்த பேருந்து தற்போது, வெள்ளை, நீலம், சாம்பல் நிறங்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தொலைதூர பேருந்துகள் வெள்ளை நிறத்திலும் மற்ற பேருந்துகள் நீலம், சாம்பல் நிறங்களிலும் உள்ளன.
