தமிழக அரசு பள்ளிகளில் கணினி செயல் விளக்க மிஷின்கள் அமைத்து, அதன் மூலம் மாணவ - மாணவிகளின் கல்வித்தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 500 ரோபோ கணினி செயல் விளக்க மெஷின்களை பள்ளிகளில் அமைத்து அதன் மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயர்த்த
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள அரசு பள்ளியின் 125-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, தனியார் பள்ளிகள் அதிகமானதால், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவ - மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றார். அமைச்சர் தங்கமணி பேசும்போது, நாமக்கல் மாவட்டம் கடந்த 7 ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சி திட்டங்களை வேறு எந்த ஆண்டிலும் பெற்றதில்லை என்றும், எஸ்.பி.பி. காலனியில் புதிதாக 39 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்பட்டு தற்போது பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாக கூறினார்.

அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, தமிழகத்தில் மேலும் 312 அரசு பள்ளிகளில் நீட் தேர்வு மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீட் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 412 ஆக உயர்ந்துள்ளது என்றார். 10 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட்கிளாஸ் நடத்த வழிவகுக்கப்படும் என்றார். தமிழகத்தில் 500 ரோபோ கணினி செயல் விளக்க மெஷின்களை பள்ளிகளில் அமைத்து அதன் மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

அமைச்சரின் இந்த கருத்துக்கு தற்போது கண்டணங்கள் எழுந்துள்ளன. ஒரு பக்கம் 13 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக கூறிவிட்டு 500 ரோபோக்களைக் கொண்டு பாடம் நடத்துவோம் என்று அமைச்சர் சொல்வது விந்தையாக உள்ளது என்று தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் தாஸ் கூறியுள்ளார்.  ரோபோக்களை வைத்து பாடம் நடத்தப்படும என்ற அமைச்சரின் அறிவிப்பு அதிர்ச்சிக்குரியது என்றும் குழந்தைகளின் கையைப் பிடித்து அ என்று கற்றுக் கொடுக்கும் தொடுவுணர்வு, ஆசிரியர் மூலமே கிடைக்கும் என்றும் தாஸ் கூறினார்.