Asianet News TamilAsianet News Tamil

500 கோடி கறுப்பு பணம் பளீர் வெள்ளையான கதை: அம்மாடியோவ்வ்வ்வ் ஆறுமுகசாமி!

500 crore black money change white
500 crore black money change white
Author
First Published Nov 14, 2017, 9:37 PM IST


ரெய்டில் சிக்கிய பிரதேசங்களில் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள செந்தில் பேப்பர் மில்லும் ஒன்று. இது கோயமுத்தூரை சேர்ந்த ‘மணல் மன்னர்’ ஆறுமுகசாமிக்கு சொந்தமானது. இங்கு மட்டும் இரண்டு நாட்கள் ரெய்டு நடத்தியிருக்கிறது ஐ.டி. துறை.
ஏன்?

இந்த மில்லின் பின்னணியையும், இதில் சசி டீமின் கை நுழைந்திருக்கும் பின்னணியையும் மிக துல்லியமாக ஸ்மெல் செய்துவிட்டே நுழைந்திருக்கிறது வருமான வரித்துறை. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வரை 4 ஆயிரம் பேர் பணிபுரிந்த இந்த மில்லில் இப்போது வெறும் 60 பேர் மட்டும்தான் பணி புரிகிறார்களாம். அந்தளவுக்கு மில் சுருக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ரெய்டின் போது அதிகாரிகள் கணக்கை ஆய்வு செய்தபோது ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக கிட்டத்தட்ட மூடப்பட்ட மில்லில் சென்ற டிசம்பர் மாதம் மட்டும் நான்காயிரம் பேருக்கு நிலுவை தொகையாக ஆறு மாத சம்பளம் என சுமார் நூறு கோடி பழைய நோட்டுகள் பட்டுவாடா செய்யப்பட்டதாக கணக்கு இருந்ததாம்.

சென்ற நவம்பர் மாத இறுதியில் சுமார் 500 கோடி பழைய நோட்டுகள் கொடுக்கப்பட்டு சசிகலா குடும்பத்திற்கு மில் கைமாற்றி விடப்பட்டுள்ளது. ஆனால் பெயர் மாற்றம் உட்பட ஆவண மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லையாம். இது போக இன்னும் பல பகீர் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ஆக மொத்தத்தில் சுமார் ஒரு வருட காலத்திற்குள் ஐநூறு கோடி ரூபாய் கறுப்புப் பணம் இங்கே வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்திருக்கிறது என்கிறார்கள்.
அம்மாடியோவ்வ்வ்வ்....ஆறுமுகசாமி!

 

Follow Us:
Download App:
  • android
  • ios