Asianet News TamilAsianet News Tamil

ஒரே நேரத்தில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் ராஜினாமா...!! கல்வித்துறையில் அதிர்ச்சி, நடந்தது என்ன...??

மாநில அரசின் பதில் திருப்தியாக இல்லாததால் பல்வேறு அரசு நடத்தும் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களது வேலைகளை ராஜினாமா செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .  

5 thousand temporary teachers resigned there job by government irresponsibility
Author
Chennai, First Published Jan 17, 2020, 12:57 PM IST

மாநில அரசின் பதில் திருப்தியாக இல்லாததால் பல்வேறு அரசு நடத்தும் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களது வேலைகளை ராஜினாமா செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலித பதவியில் இருந்த காலத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில்  ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில்  சுமார் 16 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமிக்கப்பட்டனர் ஆசிரியர்கள் 6, 7,  மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பாடங்களை  மாநிலம் முழுவதிலும் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கற்பிக்க நியமிக்கப்பட்டனர். 

5 thousand temporary teachers resigned there job by government irresponsibilityஇந்நிலையில் 2016 ஆம் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அவர்களின் சம்பளம்  7.000  உயர்த்தப்பட்டது பின்னர் 2017 அவர்களின் ஊதியம் 7.700 ஆக உயர்த்தப்பட்டது ஆனாலும் தற்காலிக கற்பித்தல் ஆசிரியர்கள்  தங்களுக்கு பிஎஃப் , இஎஸ்ஐ ,  சுகாதார காப்பீடு ,  மகப்பேறு சலுகைகள்  போன்ற எந்த நன்மையும் இல்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர் .  எனவே தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் தங்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   ஆனால் இதுவரையில் அதற்கு முறையான பதில் இல்லாததால் தற்போது சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .  இதேபோல் பிற மாநிலங்களில் உள்ள தற்காலிக ஆசிரியர்கள் 10,000 அதிகமான தொகை பெறுவதாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர் .

5 thousand temporary teachers resigned there job by government irresponsibility

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர ஊழியர்கள் ஆக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அதன் அடிப்படையில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறியதாகவும்  ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .  தற்போது சுமார் 11,500 தற்காலிக கற்பித்தல் ஊழியர்கள் மட்டுமே  பணியாற்றி வருவதாகவும் அனைத்து தமிழ்நாடு தற்காலிக ஆசிரியர் நலன்புரி சங்கம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார் .  தங்கள் பிரச்சினை தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தில் குரல் எழுப்ப வேண்டும் என திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தற்காலிக ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .  மேலும் ராஜனமா காரணமாக உருவாகியுள்ள 5 ஆயிரம் காலி பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios