ரஜினியின் ஆதரவு கேட்டு தொடர்ந்து பாஜக தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் ஆனால், அவர் ரஜினி பிடி கொடுக்காமல் நழுவி வந்ததாகவும் பரசலாக பேச்சுகள் உலா வந்தன.

ஆடிட்டர் குருமூர்த்தி, ரஜினிக்கு அழுத்தம் கொடுக்கிறார். நிதின் கட்கரி நிர்பந்தப்படுத்துகிறார். ஆனால், ரஜினியோ, ‘நான் இப்போ இருக்கும் சூழ்நிலையில் கூட்டணி பற்றியெல்லாம் பேசுற நிலையில் இல்லை. நான் இன்னும் அரசியல் கட்சி தொடங்கவே இல்லை. அதுக்குள்ள எதுக்கு என்னை ஒரு வட்டத்துக்குள் கொண்டு வர நினைக்கிறீங்க. அதனால் இந்த முயற்சிகளை இத்தோடு நிறுத்திடுங்க’ என பல முறை பாஜக நிர்வாகிகளிடம் வெளிப்படையாகவே சொல்லி வந்தாராம் ரஜினி. 

ரஜினி அடம்பிடிப்பதை டெல்லிக்கு சொல்லி விட்டாராம் குருமூர்த்தி. அதன் பிறகு டெல்லியில் இருந்து பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர் ரஜினியைத் தொடர்பு கொண்டு பேசி வந்திருக்கிறார்கள். அவ்வப்போது ரஜினியை தொடர்பு கொள்ளும் அவர்கள் அவரை எச்சரிக்கும் தொனியில் பேசி வந்திருக்கிறார்கள். அதன் பிறகே கடந்த மாதம் பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக ஆட்சி பற்றிய கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான் 10 பேர் சேர்ந்து எதிர்த்தாலும் ஒற்றை நபராக நின்று சமாளிக்கும் பலசாலி மோடி என்பதை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் ரஜினி. இது பரபரப்பாக பேசப்பட்டது. நிர்பந்தத்தால் அப்படி பேச வேண்டியதாயிற்று என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.

  

ஆனாலும், இப்படி பாஜகவை பாராட்டியது போல், இறக்கி வைத்து பேசவும் ஒரு நேரம் வரும் எனக் காத்திருந்தவருக்கு ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பாஜக சறுக்கியதை பயன்படுத்திக் கொண்டார். ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து? அவரிடம் கேள்வி கேட்டபோது ’’கிளியரா பாஜக தனது செல்வாக்கை இழந்துவிட்டது என்பதை காட்டுகிறது. கண்டிப்பாக இது பாஜகவுக்கு ஒரு பின்னடைவுதான் அதில் சந்தேகமே இல்லை’’  எனப் பதிலளித்து தனது நேரெதிர் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார் ரஜினி. ரஜினியின் இந்தக் கருத்து பாஜகவினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்நிலையில் கட்சி ஆரம்பிக்கும் வரை பாஜக பற்றி வாயே திறக்கக் கூடாது எனவும் முடிவெடுத்திருக்கும் அவர். பாஜகவுக்கு ஆதரவாக நிபந்தத்தால் பேசி தெறித்து ஓடிய ரஜினி, இப்போது எதிரான கருத்தைக் கூறி பாஜகவை தெறிக்க விட்டிருக்கிறார். இதன் மூலம் பாஜக அவர் பாஜகவின் விஸ்வாசியல்ல என வெளிப்படுத்தி உள்ளார்.