ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றள்ளது. அதே நேரத்தில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அனைத்து மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்தது. 

தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் மாநில கட்சி வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்தில் மத்திய கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதில் போட்டியிட்ட பாஜக, 5 மாநிலங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள், வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னுதாரணம் என  அனைத்து கட்சியினரும் கூறியுள்ளனர். 

இந்நிலையில், புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கலெக்டர் வினயை சந்தித்த அவர், தேவேந்திர குல வேளாளர் ஜாதியை பட்டியல் இனத்தில் இருந்து நீக்க வேண்டும் என கிராம மக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனுவாக அளித்தார்.

அதன் பின் வெளியே வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.  5 மாநில தேர்தல் முடிவுகள் அந்தந்த மாநில பிரச்சனைகளை வைத்தே வெற்றியில் அமைந்துள்ளது. இதனால், இதற்கும் நாடாளுமன்ற  தேர்தலுக்கும் சம்பந்தம்  இல்லை. இந்த தேர்தல் முடிவுகளை நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது. இந்த முடிவுகள் நாடாளுமன்ற  தேர்தலில் எதிரொலிக்காது. இருந்தபோதும் தற்போது ஏற்பட்ட தோல்வியை பாஜக எச்சரிக்கையாக கருதி வரும் நாட்களில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.