Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் 464 கோடி, கோவையில் 346 கோடி ஊழல்.. ரவுண்டு கட்டி அள்ளிய எஸ்.பி வேலுமணி..?? துருவி துருவி விசாரணை.

சென்னை எம் ஆர்சி நகர் சத்யதேவ் அவன்யூவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் சகோதரர் அன்பரசன் இல்லத்தில் காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழக முழுவதும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இல்லம் உட்பட உறவினர் வீடுகள் 52இடங்களில் லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

464 crore in Chennai and 346 crore in Coimbatore .. SP Velumani scam .. ?? Continur Investigation with sp velumani.
Author
Chennai, First Published Aug 10, 2021, 11:13 AM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனக்கு நெருக்கமானவர்களுக்கு 811 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்களை ஒதுக்கியதாக புகார் எழுந்துள்ள நிலையில் அவரது வீடு மற்றும் அலுவலங்கம், மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்கள் என மொத்த 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  2014-18 ஆம் ஆண்டுகளில் மட்டும், கோவை மாநகராட்சியில் 346.81 கோடி கோடி ருபாய்க்கும், சென்னை மாநகராட்சியில் 464.02 கோடிக்கு ஒப்பந்தங்களும் ஒதுக்கப்பட்டதாக எஸ்.பி வேலுமணி மீது புகார் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எஸ் பி வேலுமணி சார்ந்த நிறுவனங்களில் மின்னல் வேக வளர்ச்சி குறித்தும் சென்னை சட்ட மன்ற உறுப்பினர்கள் விடுதியில் உள்ள அவரிடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். 

464 crore in Chennai and 346 crore in Coimbatore .. SP Velumani scam .. ?? Continur Investigation with sp velumani.

சென்னை எம் ஆர்சி நகர் சத்யதேவ் அவன்யூவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் சகோதரர் அன்பரசன் இல்லத்தில் காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழக முழுவதும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இல்லம் உட்பட உறவினர் வீடுகள் 52இடங்களில் லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் சென்னையில் கோடம்பாக்கம் நண்பர் இல்லம் ,எம் ஆர்சி நகரில் உள்ள சகோதரர் இல்லம், ஆழ்வார்பேட்டையிலுள்ள உறவினர் இல்லம், முகபேர், சட்டமன்ற உறுப்பினகள் விடுதியில் உள்ள அவரின் அறை , உள்ளிட்ட 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

464 crore in Chennai and 346 crore in Coimbatore .. SP Velumani scam .. ?? Continur Investigation with sp velumani.

இதில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது டெண்டரில் பல்வேறு முறைகேடு செய்து சொத்துகுவித்ததாகவும் மேலும் 2018 ல் சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட சில பணிகளில் ஒதுக்கப்பட்ட டெண்டரில் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக சி ஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் , ரூரல் கடன், கிராமப்புற நீர்வளங்கள் உள்ளிட்ட சிறப்பு திட்டத்தை 2018 முதல் 2021 வரை எஸ் பி வேலுமணி கையாண்டதாகவும் குடும்ப உறுப்பினர்களை கொண்டு நிறுவனங்கள் தொடங்கி  ஒப்பந்தங்கள் வழங்கியதாகவும், டெண்டர் ஒதுக்கி தருவதாக 1.20லட்சம் பணம் பெற்றுகொண்டு டெண்டர் ஒதுக்கவில்லை என கோவையை சேர்ந்த ஒப்பந்ததாரர் திருவேங்கடம் சென்னை காவல் ஆனையரிடம் கொடுத்த புகார் அடிப்படையிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios