Asianet News TamilAsianet News Tamil

TTV.Dhinakaran: உங்களுக்கு இது பொழப்பா போச்சு... கவலையில் டிடிவி.தினகரன்..!

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி படகு சிறைப்பிடிப்பதை  இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து  நேற்று 570 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

42 Tamil Nadu fishermen arrested... TTV Dinakaran worried.
Author
Tamil Nadu, First Published Dec 19, 2021, 8:05 PM IST

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைப்பிடித்திருப்பதாக வந்திருக்கும் செய்தி கவலையளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி படகு சிறைப்பிடிப்பதை  இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து  நேற்று 570 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் செல்வம், வினால்டல், சார்லஸ், வெல்தாஸ். லியோ ஆகியோருக்கு சொந்தமான 6 விசைப்படகுகளுடன் 42 மீனவர்களை சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

42 Tamil Nadu fishermen arrested... TTV Dinakaran worried.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 42 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ராமேசுவரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளை காலை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். இதனிடையே நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் 12  மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த செயலுக்கு டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

42 Tamil Nadu fishermen arrested... TTV Dinakaran worried.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைப்பிடித்திருப்பதாக வந்திருக்கும் செய்தி கவலையளிக்கிறது.

இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலை மத்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும். இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு தனது கண்டனத்தைப் பதிவு செய்வதுடன் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என டிடிவி.தினகரன் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios